BJP யினரால் அசிங்கபட்ட அண்ணாமலை? கல்லூரியில் அனுமதி வாங்காமல் 'அண்ணாமலையுடன் செல்பி' நிகழ்ச்சிக்கு இன்விடேசன்

Published : Jul 15, 2022, 02:57 PM IST
BJP யினரால் அசிங்கபட்ட அண்ணாமலை? கல்லூரியில் அனுமதி வாங்காமல் 'அண்ணாமலையுடன்  செல்பி' நிகழ்ச்சிக்கு இன்விடேசன்

சுருக்கம்

அண்ணாமலை உடன் செல்பி எடுக்க கல்லூரி மாணவர்களுக்கு பாஜக போட்டி நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில்,  அனுமதியின்றி கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்துவதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

செல்பி வித் அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக குறைந்தது 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக  பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் தமிழகத்தில் பாஜகவை கிராம்ப்பகுதிகளிலும் வளர்க்க தீவிர நடவடிக்கையில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவில் இணைய மிஸ்டு கால் கொடுத்தால் போதும் போதும் என்ற அறிவிப்பும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது செல்பி வித் அண்ணா என்ற தலைப்பில் அண்ணாமலையோடு செல்பி எடுப்பதற்கான போட்டியை திருப்பூர் பாஜக அறிவித்துள்ளது. அந்த அழைப்பிதழில் பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக கல்லூர் மாணவர்களுக்கான செல்பி வித் அண்ணா என்ற தலைவப்பில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் அண்ணா அண்ணாமலை அழைக்கிறார் என்றும் இடம்  திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூர் மற்றும் எல். ஆர். ஜி.பெண்கள் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இபிஎஸ்சை சந்தித்து ஓபிஎஸ் மன்னிப்பு கேட்ட வேண்டும்..! ஏட்டிக்கு போட்டியாக செய்தால் பலன் இல்லை- செல்லூர் ராஜூ

கல்லூரி நிர்வாகம் மறுப்பு

கல்லூரிகளில் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வு நடைபெற அனுமதி இல்லாத நிலையில் பாஜகவின் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டது. இந்தநிலையில், எல்.ஆர்.ஜி கல்லூரி நிர்வாகம் சார்பாக தற்போது அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தவறாக பயன்படுத்து வருவதாக தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக வெளியான தகவலுக்கும் கல்லூரிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற நிகழ்சி நடத்த அனுமதி இல்லையென்று தெரிவிக்கப்பட்டது. இதே போல சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்க்கு நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லையென கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பாஜக மகளிர் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

பெரியார் பல்கலைக் கழகத்தில் சாதி தொடர்பான கேள்வியா..? இது தான் சமூக நீதியா கொந்தளித்த அண்ணாமலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!