விருதுநகர்: கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம் நள்ளிரவில் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
விருதுநகர்: கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம் நள்ளிரவில் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
undefined
20 நாட்களாக மாயமானாக மாறி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நேற்று காரில் சேஸ் செய்து கைது செய்திருக்கிறது போலீஸ். கிட்டத்தட்ட சினிமா பாணியில் தான் இந்த சேசிங் நிகழ்ந்திருப்பதாக கூறுகின்றனர் சம்பவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள்.
விருதுநகர் காவல்துறையின் கீழ் தான் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவானது என்பதால் தென் மண்டல ஐஜி அன்பு நேரடியாக விசாரணை நடத்தி வந்தார். தனிப்படைகள் ஒரு பக்கம் களம் இறங்கி ராஜேந்திர பாலாஜியை தேடி ஓடினாலும் மறுபக்கம் மேற்கு மண்டல காவல்துறையும் களத்தில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வந்தது.
காவல்துறையின் ஒட்டுமொத்த படையும் துரத்த ஆரம்பிக்க, அவர்களின் கண்களில் கர்நாடகா, கேரளா என அங்கிட்டும், இங்கிட்டும் ஆட்டம் காட்ட ஆரம்பித்தாராம் ராஜேந்திர பாலாஜி. அவருக்கு தமிழக போலீசில் உள்ள சிலர் உதவுவதால் தான் கிட்டவந்தும் ராஜேந்திர பாலாஜி எஸ்கேப்பானபடி இருந்துள்ளராம்.
அப்போது கர்நாடகாவில் உள்ள ஹசன் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பயணித்த காரை கண்டுகொள்ளாமல் (?) போலீசார் இருந்துவிட… உடனடியாக ஸ்பெஷல் டீம் களத்தில் குதித்து, அந்த காரை சேஸ் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அனைத்தும் பக்கவாக ரெடியான பிறகே, தமிழக காவல்துறை மேலிடத்துக்கு மெசேஜை பாஸ் செய்திருக்கிறது. அதன்பின்னர் தான் சேசிங், நடுரோட்டில் கைது என சினிமா பாணி சம்பவங்கள் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
ராஜேந்திர பாலாஜி, அவருக்கு உதவியதாக பாஜகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஹசனில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் ஹசன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விருதுநகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
நடுராத்திரி 1 மணிக்கு ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அனைவரும் விருதுநகர் கொண்டு வரப்பட்டனர். மதுரை சரக டிஜஜி காமினி, எஸ்பி மனோகரன் கொண்ட டீம் விசாரணை நடத்தி இருக்கிறது.
கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நீடித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. அப்போது 19 நாட்களுக்கும் மேலாக தாம் தலைமறைவாக இருந்த போது பயணித்த, பதுங்கிய விவரங்களை கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமது தலைமறைவு படலத்துக்கு உதவிய அரசியல் பிரமுகர்கள் யார் என்பது பற்றியும் அவர் போலீசிடம் கூறி இருப்பதாகவும் தகவல்கள் கசிய, முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் கிலியில் உள்ளனராம்.
கிட்டத்தட்ட 20 நாட்கள் தலைமறைவு, கார் சேசிங், நடுரோட்டில் கைது என சினிமா பாணியில் கைது செய்யப்பட்டு உள்ள ராஜேந்திர பாலாஜியிடம் நடத்தப்பட்ட அடுத்தக்கட்ட விசாரணையின் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்றும் நம்பகிறது காவல்துறை.