Rajendra Balaji: ராஜேந்திர பாலாஜி கைதுக்கு எதிர்ப்பு.. அதிமுகவினர் 100 பேர் திடீர் கைதால் பரபரப்பு..!

Published : Jan 06, 2022, 07:47 AM ISTUpdated : Jan 06, 2022, 08:20 AM IST
Rajendra Balaji: ராஜேந்திர பாலாஜி கைதுக்கு  எதிர்ப்பு.. அதிமுகவினர் 100 பேர் திடீர் கைதால் பரபரப்பு..!

சுருக்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ராஜேந்திர பாலாஜி திடீரென தலைமறைவானார். 

வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ராஜேந்திர பாலாஜி திடீரென தலைமறைவானார். அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். 

ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேவேளையில் தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் தேடுதல் பணி நடைபெற்றது. விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, செல்போன் சிக்னல் மூலம் போலீஸார் அவரை கண்காணித்தனர்.

இதனிடையே தனிப்படை போலீசாருக்கு ராஜேந்திர பாலாஜி க‌ர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும், பாஜக பிரமுகர்கள் உதவியோடு காரில் வலம் வருவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் நேற்று பி.எம்.சாலையில் காரில் சென்ற ராஜேந்திர பாலாஜியை மடக்கினர். போலீசாரின் வாகனத்தை பார்த்ததும் தப்பியோட முயன்ற அவரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து, விருதுநகர் அழைத்து வரப்பட்டு மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகிய இருவரும் ராஜேந்திர பாலாஜியிடம் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்று வாக்கு மூலம் பெற்ற பின்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பாக  ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இதனிடையே, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு ராஜேந்திரபாலாஜி அழைத்து வரப்பட போது ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கூடிய முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!