
தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ராஜரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தமிழக அரசின் புதிய தலைமை குற்றவியல் வழக்கறிஞராக எமிலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ராஜரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவர், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் குமாரிடம் ஜூனியராக பணியாற்றியுள்ளார்.
அரசு ப்ளீடராக உள்ள எம்.கே.சுப்ரமணியனும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலரும் ஓரிரு நாளில் பதவி விலகுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளதால் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் இவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ராஜரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தமிழக அரசின் புதிய தலைமை குற்றவியல் வழக்கறிஞராக எமிலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.