மின்னணு வாக்காளர் அடையாள அட்டை .. அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய வசதி.. தேர்தல் ஆணையம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2021, 11:45 AM IST
Highlights

வாக்காளர் அடையாள அட்டையை  தேர்தல் நாளன்று வாக்களிக்க அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 24மணி  நேரமும் இயங்கும் வாக்காளர் உதவி எண் 1950 க்கு தொடர்பு கொள்ளலாம்,

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவரம்: 

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 போது வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-Epic) NVSP இணைய தளம்  வாயிலாக வழங்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுரைகள்  வர பெற்றுள்ளது. 

இதன்மூலம் இளம் வாக்காளர்கள் தங்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளை தங்கள் அலைபேசியில் பின்வருமாறு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

*NVSP இணைய தளத்தில் பதிவு செய்து உள்நுழைய வேண்டும். 

*வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

*பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் OTP யை சரி பார்த்து  உள்ளிட வேண்டும். 

இ-வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவிறக்கம் என்பதை தேர்வு செய்து தங்களது இ- வாக்காளர்  அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். 

இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,  இதுவரை இ-  வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்யாதவர்கள் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு எதுவாகவும் 13-3- 2021 மற்றும் 14-3-2021 ஆகிய இரண்டு நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1061 இடங்களில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சிறப்பு முகாம்களில் இணைய வசதியுடன் கூடிய மடிக் கணினியும், அதனை இயக்குவதற்கான தொழில்நுட்ப பணியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

எனவே சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட அனைத்து இளம் வாக்காளர்கள், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எண்ணிற்கான கைபேசியுடன் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு 13,14 ஆகிய இரண்டு நாட்களில் ஏதேனும் ஒரு தினத்தில் நேரில் சென்று, இதற்கென அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப இயக்குனர் உதவியுடன் www.nvsp.in அல்லது https://nvsp.in என்ற இணையதளம் வாயிலாக மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டையை  தேர்தல் நாளன்று வாக்களிக்க அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 24மணி  நேரமும் இயங்கும் வாக்காளர் உதவி எண் 1950 க்கு தொடர்பு கொள்ளலாம், மேற்படி சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொண்டு இளம் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

 

click me!