திக்குமுக்காடும் திமுக... அடிச்சு தூக்கும் பாமக... ஜெயங்கொண்டம் தொகுதியில் முந்தும் பாலு..!

By vinoth kumarFirst Published Mar 13, 2021, 11:44 AM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக வேட்பாளரை விட பாமக வேட்பாளரும், வழக்கறிஞருமான பாலு தற்போது வரை முன்னிலையில் இருந்து வருகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக வேட்பாளரை விட பாமக வேட்பாளரும், வழக்கறிஞருமான பாலு முன்னிலையில் இருந்து வருகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தலைமைகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்ததுடன், கூட்டணி கட்சிகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டன. மேலும், வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது.

இந்த சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சாதாரண மக்களிடம் எழுந்துள்ளது, அதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரண்டு ஆளுமைகள் இல்லாத நிலை மேலும் மத்தியில் பாஜக அசுர பலத்துடன் இருக்கும் நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருப்பதால் வட மாவட்டங்களில் அதிமுக பாமக கூட்டணி, திமுகவிற்கு மிக பெரிய சவாலை கொடுத்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த முறை நடைபெற வாய்ப்புகள் குறைவு என முன்பே வெளியான கருத்து கணிப்புகள் உறுதி செய்தன.

இந்நிலையில், ஜெயங்கொண்டம் தொகுதி பாமகாவிற்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் சார்பில் வேட்பாளராக வழக்கறிஞர் பாலு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். . தனக்கு சீட் கிடைக்கவில்லை என்று சில நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தாலும் பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனையடுத்து, முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை வணங்கி இன்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 

 இப்படி பாமக களத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முந்திக்கொண்டு பணியாற்ற தொடங்க திமுக சார்பில் கேஎஸ்கே. கண்ணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். களத்தில் தெரிந்த முகம் பாமக அதிமுக கூட்டணி வாக்குகள், மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் மது கடைகளை ஒழிக்க போராடியவர், பல நாடக காதல் வழக்குகளில் பல பெண்களை காப்பாற்றியவர் என்ற அடிப்படையில் தனித்துவம் பெற்று களத்தில் முன்னேறி கொண்டு இருக்கிறார் பாமக பாலு. தற்போதைய நிலவரப்படி பாமக திமுகவை காட்டிலும் ஜெயங்கொண்டம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

click me!