இபிஎஸ்-ஐ இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க இயலாது.. அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!!

By Narendran SFirst Published Feb 2, 2023, 7:05 PM IST
Highlights

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிப்வெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிப்வெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக தனது கையெழுத்தை அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரியும் பழனிசாமி மனுதாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி கலவரம்... திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

அதில், இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தை யாரும் அணுகவில்லை. தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ இல்லை. எனவே இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார். தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிட முடியாது.

இதையும் படிங்க: பாஜக போட்டியிட்டாலும் வேட்பாளரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்.!

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது, தேர்தல் நடத்துவது, கண்காணிப்பது தேர்தல் ஆணையத்தின் பணி. தேர்தல் ஆணையத்துக்கு கையெழுத்திட அதிகாரம் உள்ளவர் என தேர்தல் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவரின் கையெழுத்திட்ட வேட்பு மனுவையே ஏற்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் வழங்கிய பொது குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

click me!