ஓபிஎஸ் புகாரால் பல்டி அடித்த தேர்தல் ஆணையம்.! ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் கடிதம்! ஷாக் ஆன இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Dec 30, 2022, 1:39 PM IST
Highlights

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டதில் பங்கேற்க எடப்பாடிக்கு மட்டும் அழைப்பு அனுப்பியதற்கு ஓ.பிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்கும்  தேர்தல் ஆணையம் அழைப்பு அனுப்பியுள்ளது. 

ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவு பட்டுள்ளது. இந்தநிலையில் எந்த அணிக்கு அதிமுக சொந்தம் என இரு தரப்பும் மோதிக்கொண்டு வருகிறது.  உச்சநீதிமன்றத்திலும் வழக்கானது நிலுவையில் உள்ளது.  இந்தநிலையில் ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்னை அனுப்பியுள்ளது.  அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.மேலும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி தெரிவித்துள்ளது. இந்த கடிதத்தால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது புதிய கடித்த்தை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. 

இபிஎஸ்க்கு அங்கீகாரமா.? மோதல் ஏற்பட வாய்ப்பு..! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி பரபரப்பு புகார்

இபிஎஸக்கு அழைப்பு கடிதம்

அதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இஉத தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக ஜனவரி 16ஆம் தேதி அனைத்து கட்சி கருத்து கேட்டு கூட்டத்தில் பங்கேற்க  சட்ட ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தவறுதலாக கடிதம் அனுப்பிய நிலையில் இது குறித்து புகார் செய்யப்பட்டதாக தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் தற்போது அனைத்து கட்சி கருத்து கேட்டு கூட்டத்திற்கு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ஓபிஎஸ்-க்கு அழைப்பிதழ் அனுப்பி உள்ளதாக கூறினார். 

ஒருங்கிணைப்பாளர்களுக்கு கடிதம்

அனைத்து கட்சிகளின் கருத்துக்கேட்பு கூட்டம் டெல்லியில் வரும் ஜன.16 ம் தேதி நடைபெறுவதாகவும்  இந்த கூட்டத்தில் பங்கேற்க தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை  ஒருங்கிணைப்பாளர் என கடிதம்  அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 2026 வரை ஓபிஎஸ் தான் பதவி வகிக்கிறார் என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிமுக அலுவலகத்தை கள்ள சாவி போட்டு அலுவலகத்தை  திறந்து உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இறுதி  தீர்ப்பு வந்ததும் அதிமுக அலுவலகம் செல்வோம் என தெரிவித்தார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர்  என்று சொல்லக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி பதவிக்காலம் காலாவதி ஆகிவிட்டதாகவும் அவர் தற்போது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இல்லை எனவும் தெரிவித்தார். 

click me!