விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததை அடுத்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் நிர்வாக வசதிகளுக்காக "விழுப்புரம் வடக்கு" விழுப்புரம் கிழக்கு மற்றும் விழுப்புரம் தெற்கு" என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதற்குண்டான சட்டமன்றத் தொகுதிகளை அமமுக தலைமை அறிவித்துள்ளது.
விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததை அடுத்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
undefined
இதுதொடர்பாக அமமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விழுப்புரம் வடக்கு மற்றும் விழுப்புரம் கிழக்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்டத்தின் நிர்வாக வசதிகளுக்காக "விழுப்புரம் வடக்கு" விழுப்புரம் கிழக்கு மற்றும் விழுப்புரம் தெற்கு" என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதற்குண்டான சட்டமன்றத் தொகுதிகளை கீழ்காணுமாறு உள்ளடக்கி செயல்படும்.
* விழுப்புரம் வடக்கு மாவட்டம்
1. செஞ்சி சட்டமன்றத்தொகுதி
2. மயிலம் சட்டமன்றத்தொகுதி
* விழுப்புரம் கிழக்கு மாவட்டம்
1. விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதி
2. வானூர் சட்டமன்றத்தொகுதி
* விழுப்புரம் தெற்கு மாவட்டம்
1. திண்டிவனம் சட்டமன்றத்தொகுதி
2. விழுப்புரம் சட்டமன்றத்தொகுதி
விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளராக E.குமரன் (ஓலக்கூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்)
விழுப்புரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக P.கோவிந்தராஜ் (விழுப்புரம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர்)
விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளராக M.D.முத்து (விழுப்புரம் வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்மந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்றிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.