தேர்தல் தோல்வி.. கமிலா நாசரைத் தொடர்ந்து கமலை கைகழுவும் முக்கிய நிர்வாகிகள்..? பதற்றத்தில் நம்மவர்.

By Ezhilarasan BabuFirst Published May 6, 2021, 3:31 PM IST
Highlights

அதில் கோவை தொற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். 

கமீலா நாசரைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதனால் அக்கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்  அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக என ஐந்து முனை போட்டி நிலவியது. அதில்  மக்கள் நீதி மையம் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியில் மக்கள் நீதி மையம் 144 தொகுதிகளிலும், ஐஜேகே 40 சட்டமன்ற தொகுதிகளிலும், ச.ம.க 37 சட்டமன்ற தொகுதிகளிலும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 10 சட்டமன்ற தொகுதிகளிலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

அதில் கோவை தொற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதனையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அதில் தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி அவர்களிடம்  பல விஷயங்களை அவர் கேட்டறிந்தார். அப்போது தோல்வியால் துவண்டு விட வேண்டாம் என்றும், தொடர்ந்து கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய நிர்வாகிகள் மய்யத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே கமீலா நாசர் வெளியேறிய நிலையில், மேலும் பல நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளதால் இன்று மாலை கமல்ஹாசன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மாலை 5 மணிக்கு  நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கட்சியில் தொடர விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம் என்று கமல் பேசிய நிலையில், இன்று சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

click me!