மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.! பிரச்சாரம் குறித்து அதிரடி ஆர்டர் போட்ட தேர்தல் ஆணையம்..!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 15, 2021, 6:54 PM IST
Highlights

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி தேர்தல் பிரச்சாரத்திற்கு பதிவு எண் கொண்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி தேர்தல் பிரச்சாரத்திற்கு பதிவு எண் கொண்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்கள் இன்னும் சில தினங்களில் முழுமூச்சுடன் துவங்க உள்ளது. நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளனர். இப்படி பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் போது பதிவு செய்யாமல் ஓட்டப்படும் வாகனங்கள் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 39 மற்றும் பிரிவு 207-ன் படி குற்றத்திற்காக சிறை பிடிக்கப்பட்ட வாகனம் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 421 -ன் கீழ் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 192-ன் கீழ் பதிவு எண் இல்லாமல் பிரச்சாரம் மேற்கொள்ளுபவருக்கு அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்படும். மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 192(க்ஷ)(1)-ன் கீழ் வாகன உரிமையாளர் பிரிவு 41(1) படி பதிவுக்கு முறையாக விண்ணப்பிக்காததால் அபராதமாக வாகனத்தின் 5 மடங்கு ஆண்டு
வரி அல்லது மூன்றில் ஒரு பங்கு ஆயுட்கால வரி, இதில் எது அதிகபட்சமாக உள்ளதோ அதை நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம். மேலும் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 192(க்ஷ)(2) கீழ் வாகன விற்பனையாளர் பிரிவு41(1)-ன்படி பதிவு செய்யாமல் வாகனத்தை விற்றதால் அபராதமாக வாகனத்தின் 15 மடங்கு ஆண்டு வரி அல்லது வாகனத்தின் ஆயுட்கால வரி, இதில் எது அதிகபட்சமாக உள்ளதோ அதை நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம். மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 44-ன் கீழ் விற்பனையாளரின் வணிகச்சான்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் என தெரிவிக்காட்டுள்ளது.

எனவே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள வாகனங்களின் எண், பதிவு செய்யப்பட்ட எண்ணா என்று, உரிய விசாரணைக்கு பின்னரே பயன்படுத்த வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

click me!