ஆசிரியர்-அரசு ஊழியர்களின் 100 % தபால் வாக்குகளை உறுதி செய்யவேண்டும் .. ஆசிரியர் சங்கம் கோரிக்கை .

By Ezhilarasan BabuFirst Published Mar 19, 2021, 11:57 AM IST
Highlights

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்-அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல்போனது. இம்முறை அனைவரும் வாக்களிப்பதை உறுதிசெய்ய பணிபுரியும் வாக்குச்சாவடி மையத்திலே தபால் வாக்களிக்க வாய்ப்புவழங்கிடவேண்டும்.  

ஆசிரியர்-அரசு ஊழியர்களின் 100 % தபால் வாக்குகளை உறுதி செய்யவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம். தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6 ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தால் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு காலதாமின்றி தபால் வாக்குகள் அளிக்கும் வகையில் உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்-அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல்போனது. இம்முறை அனைவரும் வாக்களிப்பதை உறுதிசெய்ய பணிபுரியும் வாக்குச்சாவடி மையத்திலே தபால் வாக்களிக்க வாய்ப்புவழங்கிடவேண்டும். மேலும் ஆசிரியர்கள் தொடர்ந்து வாரத்தில் 6 நாட்களும் பள்ளிக்குவருவதால் தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்குவதை தவிர்க்கவேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் வாக்குப்பதிவு முன் நாளே பணிக்குச்சென்று மறுநாள் இரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும்வரை பணியில் உள்ளதால் தேர்தல் ஆணையமே உணவு ஏற்பாடும் மற்றும் கொரொனா பாதுகாப்பு உபகரணங்கள் கையுறை, முககவசம் உள்ளிட்டவைகளை வழங்கி உதவிடவேண்டும்.? 

தேர்தல் பணியில் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களை 10 கிலோ மீட்டருக்குள் பணி வழங்கிடவேண்டும். 16 வது சட்டமன்றத் தேர்தலில் முழு ஈடுபாடுடன் பணிபுரியக் காத்திருக்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கையினை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நிறைவேற்றித்தரும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!