ஓபிஎஸ் மகனை நினைத்து வாரிசு அரசியல் என முதல்வர் பேசிகிறார்...சிண்டு முடிச்சு விடும் மு.க.ஸ்டாலின்..!

Published : Mar 19, 2021, 11:51 AM IST
ஓபிஎஸ் மகனை நினைத்து வாரிசு அரசியல் என முதல்வர் பேசிகிறார்...சிண்டு முடிச்சு விடும் மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

ஒரு அரசியல் விபத்தால் இன்றைக்கு பதவிக்கு வந்திருக்கிறார் பழனிசாமி. ஆனால் அவர், படிப்படியாக வளர்ந்து வந்தார் என்று அடிக்கடி சொல்கிறார். அது உண்மைதான், படிப்படியாக ஊர்ந்து சென்று வளர்ந்து இருக்கிறார். 

ஒரு அரசியல் விபத்தால் இன்றைக்கு பதவிக்கு வந்திருக்கிறார் பழனிசாமி. ஆனால் அவர், படிப்படியாக வளர்ந்து வந்தார் என்று அடிக்கடி சொல்கிறார் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக வேட்பாளர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குணசேகரன், மாங்குடியை ஆதரித்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்  மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்;- தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் தோல்வி பயத்தின் காரணமாக இப்போது ஏதேதோ உளர ஆரம்பித்திருக்கிறார். வாய்க்கு வந்தபடி எல்லாம் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர் சமீபத்தில், வாரிசு அரசியலை ஒழிக்கும் தேர்தல்தான் இந்த தேர்தல் என்று பேசியிருக்கிறார். அவர் ஓ.பன்னீர்செல்வத்தையும் – அவரது மகனையும் மனதில் வைத்துக்கொண்டு அப்படிப் பேசியிருக்கிறார். வாரிசு அரசியலைப் பற்றி பழனிசாமி பேசுவதற்கு – அதிமுக பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, சசிகலாவின் கால் நோக்கி ஊர்ந்து சென்று முதலமைச்சராக ஆனவர் முதலமைச்சர் பழனிசாமி. ஜெயலலிதா அறிவிக்கும் வரை ஓ.பன்னீர்செல்வம் யாரென்று நாட்டுக்கு தெரியாது. ஜெயலலிதா அடையாளம் காட்டும் வரை பழனிசாமி யார் என்பது நாட்டுக்கு தெரியாது. ஆனால், 2 பேரும் அம்மையார் ஜெயலலிதாவிற்கு எந்த அளவிற்கு துரோகம் செய்திருக்கிறார்கள் என்பது நாட்டுக்கு நன்றாக தெரியும்.

அம்மையார் ஜெயலலிதா எப்படி மறைந்தார் என்ற விவரம் இதுவரையில் தெரியவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரையில் உண்மை வெளிவரவில்லை. இந்த லட்சணத்தில் பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் மறைவிற்கு கலைஞரும் ஸ்டாலினும்தான் காரணம் என்று பேசியிருக்கிறார். சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறு இருந்தால் நான்கு வருடமாக விசாரித்துக் கொண்டிருக்கும் ஆறுமுகசாமி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாரா? ஓ.பி.எஸ்.க்குத்தான் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த உண்மை கூடத் தெரியாமல் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் இன்றைக்கு மக்களைத் திசை திருப்புகிறார்.

அதனால் தான் நம் தேர்தல் அறிக்கையில், நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். எனவே முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடித்து நாட்டுக்கு சொல்வது இந்த ஸ்டாலினுடைய கடமை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு அரசியல் விபத்தால் இன்றைக்கு பதவிக்கு வந்திருக்கிறார் பழனிசாமி. ஆனால் அவர், படிப்படியாக வளர்ந்து வந்தார் என்று அடிக்கடி சொல்கிறார். அது உண்மைதான், படிப்படியாக ஊர்ந்து சென்று வளர்ந்து இருக்கிறார். எனவே நம்மைப் பார்த்துப் பேசுவதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என ஆவேசமாக பேசியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!