
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் பிறபித்த உத்தரவு அதிர்ச்சியளிப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைதேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16 ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனுதாக்கல் செய்யும் தேதி நிறைவடைகிறது.
இதனிடையே சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் நாங்களே உண்மையான அதிமுக என்றும், இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இதைதொடர்ந்து இருதரப்பையும் இன்று நேரில் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சசிகலா தரப்பு மற்றும் ஒ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்பு தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
பின்னர், விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தற்போது ஆர்.கே.நகர் இடைதேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இத்தகைய தீர்ப்பு ஒ.பி.எஸ்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் பிறபித்த உத்தரவு அதிர்ச்சியளிகிறது.
அனைத்து தரப்பு உண்மைகளையும் ஆதாரங்களையும் சமர்பித்தும் இரட்டை இலை கிடைக்காமல் போனது வருத்தமளிக்கிறது.
சட்டப்படி நீதியை நிலைநாட்டி கட்சியையும் ஆட்சியையும் இரட்டை இலையையும் மீட்டு எடுப்போம்.
இவ்வாறு ஒ.பி.எஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.