தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது கார் விபத்து... அதிஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ..!

Published : Oct 17, 2019, 04:46 PM IST
தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது கார் விபத்து... அதிஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ..!

சுருக்கம்

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து இன்று காலை விக்கிரவாண்டியில் தேர்தல் பணிக்காக இன்பசேகரன் எம்.எல்.ஏ. காரில் திருவண்ணாமலை வழியாக சென்றிக்கொண்டிருந்தார். அப்போது, வேட்டவலம் அடுத்த ராஜந்தாங்கல் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

திருவண்ணாமலை அருகே திமுக எம்.எல்.ஏ. இன்பசேகரனின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திமுக எம்.எல்.ஏ. அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதனால், திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் சூறாவாளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து இன்று காலை விக்கிரவாண்டியில் தேர்தல் பணிக்காக இன்பசேகரன் எம்.எல்.ஏ. காரில் திருவண்ணாமலை வழியாக சென்றிக்கொண்டிருந்தார். அப்போது, வேட்டவலம் அடுத்த ராஜந்தாங்கல் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் எம்.எல்.ஏ. இன்பசேகரன் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து, அவர் உடனே திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!