டாக்டராக வேண்டிய அனிதாவுக்கு சாவு... அதற்கு காரணமாக இருந்த எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா? கொதிக்கும் உதயநிதி..!

Published : Oct 17, 2019, 04:43 PM IST
டாக்டராக வேண்டிய அனிதாவுக்கு சாவு... அதற்கு காரணமாக இருந்த எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா? கொதிக்கும் உதயநிதி..!

சுருக்கம்

டாக்டராக வேண்டிய அனிதா மரணமடைந்து விட்டார். அதற்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டமா? என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவேங்கடநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,  “மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மோடியின் எடுபிடியாக இருக்கிறார். தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது தமிழகம் வராத மோடி, தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகையையும் தரவில்லை.

கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழக அரசு, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. டாக்டர் ஆகவேண்டிய அனிதா தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத்தராததன் காரணமாக உயிரிழந்தார். ஆனால், தமிழக முதல்வருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. அதையும் பெருமையுடன் கூறுகிறார் எடப்பாடி.

இந்தப் பகுதியில் தி.மு.க ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேல்நீர்த்தேக்கத் தொட்டி, இந்த வழித்தடத்தில் தேவைப்படும் பேருந்து சேவை உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும்” எனக் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!