வாரிசு அரசியலா பண்றீங்க..? அன்புமணியின் மார்பில் குத்திய மைத்துனர் விஷ்ணு பிரசாத்.. !

By Thiraviaraj RMFirst Published Oct 17, 2019, 3:38 PM IST
Highlights

இட ஒதுக்கீட்டில் போராடி துப்பாக்கி முனையில் முதல் குண்டை மார்பில் தாங்கிய வன்னியன் விக்கிரவாண்டி சேர்ந்த ரங்கநாதன் படையாட்சி. அவரது பேத்தி  சுதா இன்று அடையார் ஆனந்த பவனில் டேபிள் துடைத்து கொண்டிருக்கிறார். 

வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக போராடியவரின் மகள் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அவரது வாரிசு எங்கே..? உங்கள் வாரிசுகள் எங்கே என ராமதாஸுக்கு ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஷ்ணுபிரசாத், ’’வன்னியர்கள் இடஒதுக்கீட்டிற்காக 28 பேர் இறந்தது இந்த விக்கிரவாண்டி தொகுதியில் தான் என்பதை வன்னிய மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களை இடஒதுக்கீட்டு போராளிகள் என்று தான் சொன்னார்கள். 

ஆனால், அவர்களை இட ஒதுக்கீட்டு தியாகி என்று சொன்னவர் மறைந்த முதல்வர் கருணாநிதி தான். போராளிகளை தியாகிகளாக்கி அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கி அவர்களது குடும்பங்களுக்கு இன்று வரை பென்ஷன் வருகிறதென்றால் அது கருணாநிதி ஆட்சியில் நடந்தது. 

அந்த 23 பேரிலே இட ஒதுக்கீட்டில் போராடி துப்பாக்கி முனையில் முதல் குண்டை மார்பில் தாங்கிய வன்னியன் விக்கிரவாண்டி சேர்ந்த ரங்கநாதன் படையாட்சி. அவரது பேத்தி  சுதா இன்று அடையார் ஆனந்த பவனில் டேபிள் துடைத்து கொண்டிருக்கிறார். நன்றாக சிந்தியுங்கள் வன்னியர் இனத்திற்காக துப்பாக்கி குண்டிற்கு இறையான ரங்கநாத படையாச்சி வாரிசு எங்கே..?  உங்களுடைய வாரிசு எங்கே?   என்று மக்கள் கேட்கிறார்களே இது உங்களுக்கு கேட்கவில்லையா?’’ என ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

 "

இந்த விஷ்ணுபிரசாத் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் மைத்துனர். அவரே பாமகவில் வாரிசு அரசியலை பற்றி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 
 

click me!