"தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு" - உரிய விளக்கம் தர அமலாக்கத்துறைக்கு உத்தரவு!

 
Published : Jul 27, 2017, 12:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
"தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு" - உரிய விளக்கம் தர அமலாக்கத்துறைக்கு உத்தரவு!

சுருக்கம்

egmore court orders enforcement on dinakaran case

தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கில் அமலாக்கத்துறை உரிய விளக்கம் தர வேண்டும் என எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தொலைகாட்சி மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கியதி மொசடி செய்ததாக சசிகலா, டிடிவி தினகரன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் டிடிவி தினகரனை விடுவித்தது. ஆனால் கீழமை நீதிமன்றங்களின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தினகரனை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவனங்கள் மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும், தனிநபர் பரிவர்த்தனை எனவும் தினகரன் தரப்பு வாதிட்டது.

இந்நிலையில், தினகரன் மீதான அந்நிய செலாவனி வழக்கில் அமலாக்கத்துறை உரிய விளக்கம் தர வேண்டும் என எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு நாளைக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!