தடையை மீறி சென்ற ஸ்டாலின் கைது...!!

First Published Jul 27, 2017, 11:59 AM IST
Highlights
stalin arrrested in edappadi


போலீசாரின் அனுமதியையும் மீறி சேலம் கட்சராயன் ஏரி பகுதியை பார்வையிட சென்ற திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இன்று சேலம் வருகை தந்தார். அதேபோல் சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அவர் கலந்து கொள்வதாக இருந்தது.

சென்னையில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையில் இருந்து சேலம் செல்வதற்காக மு.க.ஸ்டாலின், காரில் சென்று கொண்டிருந்தபோது கோவை, சுங்கச்சாவடி அருகே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதசங்கிலி போராட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர் அத்தனை பேரும் கலந்து கொண்டு மிகப்பெரிய போராட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறியிருந்தார்.

மேலும், மனித சங்கிலி போராட்டத்துக்குத்தான் தடை போட்டுள்ளார்களே தவிர, சாலையில் செல்ல கூடாது என்று தடை போடவில்லை. எனவே தடையையும் மீறி கட்சராயன் ஏரியை பார்வையிடுவேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அனுமதியையும் மீறி மு.க.ஸ்டாலின் செல்ல முயன்றதால், அவரை போலீசார் கைது செய்தனர். 

கட்சராயன் ஏரியை பார்வையிட வரும்போது, தன்னை போலீசார் கைது செய்தால், திமுக தொண்டர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடாமல், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

click me!