கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.. பிரதமருக்கு கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின் !

By Raghupati RFirst Published Nov 11, 2022, 5:21 PM IST
Highlights

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று பிற்பகலில் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி:

விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.  இதையடுத்து, பிரதமர் மோடி திண்டுக்கல்லுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

இதையும் படிங்க..பிரதமர் மோடியை சந்திப்பது ஓபிஎஸ் டீமா? எடப்பாடி டீமா? எல்லாமே ரத்து.? வெளியான பரபரப்பு தகவல்

முதல்வர் ஸ்டாலின் பேச்சு:

அப்போது பேசிய அவர், ‘கிராமப்புற மேம்பாட்டிற்கான அறிவாலயமாக திகழும் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். குஜராத்தில் பிறந்து ஒற்றுமை, சமூக நல்லியக்கத்தை வலியுறத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த காந்திக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள உறவு மிக மிக அதிகம்தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வந்த காந்தி தமிழை விரும்பி படித்தவர். மு.க காந்தி என தமிழில் கையெழுத்திட்டவர்.

இதையும் படிங்க..2024ல் 39 சீட் குறிச்சு வச்சுக்கோங்க ! எதிர்கட்சிகளை அலறவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !

மாநில பட்டியலில் கல்வி:

திருக்குறளை படிக்க தமிழை கற்றவர். உயராடை அணிந்து அரசியலுக்குள் நுழைந்த அவரை அரையாடை உடுத்த வைத்தது இந்த தமிழ் மண் என கூறினார். வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என சொன்னவர் காந்தி. அவரது பெயரில் இயங்கும் இந்த பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க.பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?

click me!