"மோடிக்கே துரோகம் செய்த எடப்பாடி.. அதிமுக தலைமை அலுவலகத்தில் மது, மாமிசம்".. கோவை செல்வராஜ் பகீர்.

Published : Aug 22, 2022, 08:16 PM ISTUpdated : Aug 22, 2022, 08:20 PM IST
"மோடிக்கே துரோகம் செய்த எடப்பாடி.. அதிமுக தலைமை அலுவலகத்தில் மது, மாமிசம்".. கோவை செல்வராஜ் பகீர்.

சுருக்கம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மது  அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது போன்ற செயல்கள் நடைபெற்று வருவதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றம்சாட்டியுள்ளார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் மது  அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது போன்ற செயல்கள் நடைபெற்று வருவதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றம்சாட்டியுள்ளார். விரைவில் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள பாபா இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர், ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- முனுசாமியை இரண்டாம் கட்ட தலைவராக வாய்ப்பு கொடுத்தவர் ஓபிஎஸ், ஆனால் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கே.பி முனுசாமி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களை மிகத் இழிவாக பேசியுள்ளார், அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அம்மாவால் விரட்டியடிக்கப்பட்டவர்தான்முனுசாமி, ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தவர் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட முனுசாமிக்கு எதிராக பேசியபோது அவருக்கு ஆதரவு கொடுத்தவர் ஓபிஎஸ், இப்போது ஓபிஎஸ் அதிமுகவின் வேலைசெய்யவில்லை என்று சொல்கிறார்கள், ஆனால் அம்மாவிடம் கட்சிக்கு விசுவாசமிக்க தொண்டர் என்ற நற்பெயரை வாங்கியவர் ஓபிஎஸ்தான், அவரைப் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை, வருமான வரித்துறை சோதனை நடக்கும்போதே அடியாட்களை வீட்டுக்கு முன்பாக குவிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும், இரட்டை இலைக்கு எதிராக கட்சிக்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமிதான்.

கொடநாட்டில் கொலை கொள்ளை நடந்தது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்தான், அம்மாவின் வீட்டுக்கு கூட பாதுகாப்பு கொடுக்காதவர் எடப்பாடி பழனிச்சாமி, அம்மாவின் வீட்டை தனியார் வீடு என்று சொன்னவர்தான் அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த நான்கரை ஆண்டுகள் நடந்த தவறுகளை நாங்கள் பட்டியலிட்டு வெளியிடுவோம், நாங்கள் கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விரைவில் அடுத்தடுத்த பட்டியலை வெளியிடுவோம், தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது போன்ற செயல்கள் எல்லாம் நடைபெறுகிறது.

கன்சிக்கான கோடிக்கணக்கான கட்சிப் பணத்தை பாதுகாத்து வந்தவர்தான் ஓபிஎஸ், தற்போதும் கட்சியின் பொருளாளர் ஓபிஎஸ் தான், சசிகலா எப்போதும் கட்சியின் உறுப்பினர் அவர் எப்போதும் போல கட்சியில் இருப்பார், பிரதமருக்கே துரோகம் செய்ய முயன்றவர்தான் எடப்பாடி பழனிச்சாமி, கூடியவிரைவில் அந்த தகவல், காரணம் வெளியே தெரியவரும். கொடி, கட்சி, சின்னம் அனைத்தும் ஓபிஎஸ் தலைமையில்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி