தமிழகத்தின் அடுத்த ஆளுநர் இவர்தான்.. மேலிடம் கொடுத்த க்ரீன் சிக்னல்! ஓகே சொல்வாரா ரஜினிகாந்த் ?

By Raghupati RFirst Published Aug 22, 2022, 8:05 PM IST
Highlights

திமுகவுடன் ஆளுநருக்கான உரசல் அதிகமாகி உள்ள நிலையில், ஆளுநரின் தொடர் வெறுப்பரசியல் பேச்சால், திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

இந்தி எதிர்ப்பு கொள்கையை முன்னிறுத்தும் அரசான திமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பவர் ஆளுநர் ஆர்.என் ரவி. அவரை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு பரபரப்பை கிளப்பினார். சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். 

இந்த சந்திப்பின் போது அரசியல் பேசினோம். ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது என்று தெரிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்தன. நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் மிகமுக்கிய மனிதர். தமிழ்நாட்டின் பிரச்னைகளுக்காக பலமுறை குரல் கொடுத்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்.. சர்ச்சையில் சிக்கிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, ரஜினியை சந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை' என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை புகழ்ந்து பேசினார். ‘மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.. 30 நிமிடம் பேசினேன். அரசியல் விஷயமும் அவரிடம் பேசினேன். அவர் காஷ்மீரில் பிறந்து, வடமாநிலங்களிலேயே இருந்தவர். ஆனால், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். 

முக்கியமாக தமிழக மக்கள், அவர்களது நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துவிட்டது.  இங்கே உள்ள ஆன்மீக உணர்வு அவர் மிகவும் நேசிக்கிறார்.. தமிழகத்தின் நல்லதுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று ஆளுநர் சொல்லி உள்ளார். தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது’ என்று பேசினார்.திமுகவுடன் ஆளுநருக்கான உரசல் அதிகமாகி உள்ள நிலையில், ஆளுநரின் தொடர் வெறுப்பரசியல் பேச்சால், திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆளுநர் ரவி மீதான இமேஜை உயர்த்தி ரஜினி பேசியிருந்தது, பல்வேறு தரப்புக்கு கடுப்பை ஏற்படுத்தியிருந்தது.  2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கிறார்கள். அந்த இலக்கின் ஒரு பகுதிதான் கவர்னர் ரவி-ரஜினி சந்திப்பு என்கிறார்கள். 

மேலும் செய்திகளுக்கு..இரண்டு பேருடன் கள்ளக்காதல்.. கணவனை கழட்டிவிட்ட மனைவி - விஷயம் தெரிந்த மாமனார் செய்த சம்பவம் !

ரஜினியை பயன்படுத்திக் கொள்வதில் பாரதிய ஜனதா வட்டாரத்தில் ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது. பிரதமர் மோடி, ரஜினியை விரும்புவதாகவும், உள்துறை மந்திரி அமித்ஷா விரும்பவில்லை என்றும் கூட தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து சில பொதுக்கூட்டங்களில் பேச வைத்தாலே போதும் என்று கூட நினைக்கிறார்களாம்.

இதற்காக ரஜினிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தயாராக இருக்கிறார்களாம். தற்போது சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாகவே உள்ளது. சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைக்கலாம் என்று கூட பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் இருப்பதால், இன்னும் பல திருப்பங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

ரஜினியை முன்நிறுத்தி ஏதோ ஒரு அலையை உருவாக்க பாரதிய ஜனதாவில் சில மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தலைவருமான அர்ஜுன்மூர்த்தி இன்று பாஜகவில் இணைந்தார். இவர் யார் என்றால், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று கூறியபோது ரஜினியுடன் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மெல்ல மெல்ல ரஜினிகாந்தை அரசியலுக்குள் இழுத்துவிடும் என்றே கூறுகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..தேதி குறித்த ஸ்டாலின்.. திடீர் ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.! கொங்கு மண்டலத்தில் திமுக Vs அதிமுக மோதல்

click me!