கம்யூனிஸ்ட்டுகளையே கையெடுத்து கும்பிடவைத்த எடப்பாடியார்.. கல்வி கட்டணத்தை குறைத்து முதல்வர் கனிவு..

Published : Feb 06, 2021, 10:37 AM IST
கம்யூனிஸ்ட்டுகளையே கையெடுத்து கும்பிடவைத்த எடப்பாடியார்.. கல்வி கட்டணத்தை குறைத்து முதல்வர் கனிவு..

சுருக்கம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பல விஷயங்களில் கடுமையாக கண்டித்தும் தாக்கியும் பேசக்கூடியவர் ரவீந்திரநாத்,  ஆனால் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கட்டண விவகாரத்தில் கனிவுடன் நடவடிக்கை எடுத்த முதல்வரை பாராட்டு நெஞ்சுருக நன்றி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.  

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் கட்டணத்தினை குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசிற்கு இதயம் கனிந்த நன்றி என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கட்டணத்தினை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை தமிழக அரசானது  ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கட்டணத்தினை மற்ற அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணங்கள் அளவிற்கு குறைத்து அரசாணை வெளியிட்டது. 

இது தொடர்பாக சென்னை சேப்பாகத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கூறியதாவது: எங்களுடைய போராட்டத்திற்கு பலரும் ஆதரவு கொடுத்தார்கள், தமிழக அரசு இதர மருத்துவ கல்லூரிக்குக்கு இணையாக கல்வி கட்டனத்தினை குறைந்துள்ளது, இதனை நாங்கள் மனமார வரவேற்கிறோம், தமிழக அரசுக்கு எங்கள் பாராட்டுகள் என்று தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் , சுகாதாரத்துறை அமைச்சர் , செயலாளர், மற்றும்  எதிர் கட்சி தலைவர்கள் என அனைவருக்கும் அச்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும் கல்வி கட்டணத்தினை முதலாம் ஆண்டு மாணவர்கள் செலுத்தியுள்ளார்கள், எனவே முதலாம் ஆண்டு  மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு கட்டனத்தினை திரும்ப அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

கல்வி கட்டணம்  குறைப்பு காரணமாக ஏழை எளிய மாணவர்கள் அந்த கல்லூரியில்  சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வரவேற்க தக்கது எனவும் தெரிவித்தனர். மத்திய அரசு இந்த ஆண்டுக்கான  பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மக்கள் நல்வாழ்வு துறைக்கு சென்ற அண்டை விட  குறைவாக ஒத்துகியுள்ளது. ஆனால் அதிகமாக ஒத்துகியுது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல. ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியின் கட்டணத்தினை  குறைக்க  வலியுறுத்தி நாளை மாலை ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது இதில் ,அனைத்து கட்சி தலைவகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

அதாவது, சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் ஆவார். அவர் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் மருத்து மாணவர்களின் நலன்சார்ந்து இயங்கி வருகிறார். இயல்பாகவே அதிமுக- பாஜக அரசு கொண்டுவரும் எந்த  திட்டங்களாக இருந்தாலும் அதை தீவிரமாக எதிர்த்து குரல்கொடுத்து வருகிறார். குறிப்பாக அதிமுக மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பல விஷயங்களில் கடுமையாக கண்டித்தும் தாக்கியும் பேசக்கூடியவர் ரவீந்திரநாத்,  ஆனால் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கட்டண விவகாரத்தில் கனிவுடன் நடவடிக்கை எடுத்த முதல்வரை பாராட்டு நெஞ்சுருக நன்றி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.  
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!