ஜெட் வேகத்தில் எடப்பாடியார்.. 1,54,524 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. திமுகவின் கனவு கோட்டை தகர்ப்பு.

By Ezhilarasan BabuFirst Published Feb 6, 2021, 10:07 AM IST
Highlights

திமுகவின் திட்டத்தை புரிந்துகொண்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயும் தள்ளுபடி என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது திமுகவின் வாக்கு அரசியல் திட்டதில் பேரிடியாக விழுந்துள்ளது. 

ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என 1,54,524 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய முதலமைச்சருக்கும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்.  

அப்பொழுது, ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் 12,524 ஊராட்சி செயலர்களுக்கும், ஊராட்சித்துறையில் பணியாற்றி வந்த மோட்டார் பம்புகள் இயக்கும் 60ஆயிரம் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியமான 2,600லிருந்து 4ஆயிரமாக உயர்த்தப்படும் என அமைச்சர் எஸ். பி. வேலுமணி அறிவித்தார். 66ஆயிரம்  தூய்மை காவலர்களின் கோரிக்கையை ஏற்று ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு என 1 லட்சத்து 54 ஆயிரத்து 524 பசியாளர்களின் குடுப்பங்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி அவர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு  நன்றி தெரிவித்தது. 

நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும்  என அறிவித்தார். இது விவசாய பெருங்குடிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது. அதாவது விவசாயிகளின் வாக்குகளை கவர் செய்வதற்காக, தேர்தலில்  வெற்றிபெற்று வந்தால் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வோம் என திமுக வீதிக்கு வீதி கூறிவந்தது.  திமுகவின் திட்டத்தை புரிந்துகொண்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயும் தள்ளுபடி என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது திமுகவின் வாக்கு அரசியல் திட்டதில் பேரிடியாக விழுந்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து ஸ்டாலின் மீளூவதற்குள், ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என 1,54,524 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர். 

இதுவும் திமுகவுக்கு மரண அடியாக விழுந்துள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  மக்களின் நம்பிக்கைக்குரிய முதல்வராக எட்பாடி பழனிச்சாமி மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்து வருவது அதிமுகவின் செல்வாக்கை மக்கள் மத்தியில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க செய்துள்ளது. எடப்பாடியாரின் மக்கள் நல திட்டங்களையும், ஜெட் வேக பணிகளை பார்த்து திமுக மிரண்டு போயுள்ளது மட்டுமல்ல, திமுகவும் அதன் தலைமையுப் பீதியில் உறைந்து போயுள்ளது என்றே சொல்லலாம்.  

 

click me!