சசிகலா வருகையால் அலறும் அதிமுக கூடாராம்... அவரச ஆலோசனையில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

Published : Feb 06, 2021, 09:25 AM IST
சசிகலா வருகையால் அலறும் அதிமுக கூடாராம்... அவரச ஆலோசனையில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

சுருக்கம்

சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ள நிலையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இன்று மாலை 5 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.

சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ள நிலையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இன்று மாலை 5 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனை நிறைவடைந்து சசிகலா விடுதலையான நிலையில் வருகிற 8- ம் தேதி அவர் சென்னை வர உள்ளார். இதற்கிடையே சசிகலாவுக்கு ஆதரவாக அதிருப்தி அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஓட்டி வரும் சம்பவம் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தொடர்ந்து நீக்கி வருகின்றது. 

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

தேசியத் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டது ஏன்..? பாஜகவின் எதிர்காலத்திற்கான பலே திட்டம்..!
இனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!