கீழடி, மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை, எடப்பாடியார் தொடங்கி வைத்தார்.

By Ezhilarasan BabuFirst Published Feb 13, 2021, 3:04 PM IST
Highlights

முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்பொருள் அகழாய்வுத் துறை மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, 4, 5 மற்றும் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அப்போது கிடைத்த தொல்பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், கீழடி, மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், கீழடி பள்ளிச் சந்தை திடலில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 

முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்பொருள் அகழாய்வுத் துறை மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, 4, 5 மற்றும் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அப்போது கிடைத்த தொல்பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கீழடி, ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம்- மாளிகைமேடு ஆகிய பகுதிகளில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. 

அதன்படி, சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கானொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்து வரும் நிலையில், தமிழினத்தின் தொன்மையை அறியும் வகையில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் தொல்பொருள் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

 

click me!