மு.க.ஸ்டாலினுக்கு செக் வைக்கும் கமல்.. எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள்... அடுத்தடுத்து காத்திருக்கும் ட்விஸ்ட்

By Thiraviaraj RMFirst Published Feb 13, 2021, 1:51 PM IST
Highlights

கமலை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி' என மக்கள் நீதி மய்யம் முடிவு எடுத்துள்ளது. மேலும் தி.மு.க. வின் போக்கு பிடிக்காமல் வெளியேறும் கட்சிகளை கூட்டணியில் இணைக்க கமல் திட்டமிட்டுள்ளதும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கமலை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி' என மக்கள் நீதி மய்யம் முடிவு எடுத்துள்ளது. மேலும் தி.மு.க. வின் போக்கு பிடிக்காமல் வெளியேறும் கட்சிகளை கூட்டணியில் இணைக்க கமல் திட்டமிட்டுள்ளதும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருணாநிதி ஜெயலலிதா என இரண்டு முக்கிய தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் நேற்று முளைத்த கட்சிகள் கூட முதல்வர்நாற்காலிக்கு துண்டு போட ஆர்வமாக உள்ளன. அ.தி.மு.க. - தி.மு.க. இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்சிகளுடன் பேச்சை நடத்தி வருகின்றன.தி.மு.க. கூட்டணிக்கு கமலை இழுக்க பல கட்ட முயற்சிகள் தொடர்கின்றன. கமல் எப்படியும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் 'கமலை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி' என பொதுக்குழுவில் மக்கள் நீதி மய்யம் திட்டவட்டமாக முடிவு எடுத்துள்ளது. இதனால் தி.மு.க. - கமல் கூட்டணி கானல் நீராகி விட்டதை அக்கட்சி நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர்.கூட்டணி குறித்து முடிவு எடுக்க வேண்டிய உரிமையையும் மக்கள் நீதி மய்ய பொதுக்குழு கமலுக்கு வழங்கியுள்ளது. கமல் கூட்டணியில் இணைய ஆம் -ஆத்மி தயாராகி விட்டது. தி.மு.க.வில் 'சீட்' பேரம் சரியாக அமையா விட்டால் கம்யூ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும் கமல் தயாராகி வருகிறார்.

அதேபோல தொகுதி பங்கீடு சரியாக அமையாமல் போனால் தி.மு.க.வில் இருந்து வெளியேறி காங்கிரசும் தன்னுடன் சேரலாம் என கணக்கு போட்டு கமல் காய் நகர்த்தி வருகிறார். இதையே அவர் 'எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள்' என பேசி வருகிறார். கமலின் கூட்டணி வியூகம் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!