அலட்சியம் காட்டிய எடப்பாடி... ஸ்டாலிடனிடம் போட்டுக் கொடுத்த ராதாகிருஷ்ணன்..!

By Thiraviaraj RMFirst Published May 17, 2021, 1:59 PM IST
Highlights

கொரோனாவுக்குப் பலியான 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கும் கோப்பில் உடனடியாகக் கையெழுத்திட்டாராம் முதல்வர் ஸ்டாலின்.

மருத்துவர்கள் உள்ளிட்ட கொரோனா முன்களப் பணியாளர்கள் கொரோனா பாதித்து இறந்தால், 50 லட்ச ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும் என முதலில் அறிவித்தவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி.

ஆனால், அந்த அறிவிப்பை முழுமையாகச் செயல்படுத்த போதிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையாம் அவர். இது விஷயமாக, ‘நாம் கொடுத்த அஷ்யூரன்ஸை செய்து கொடுக்கவில்லை என்றால் கொரோனா காலத்தில் சிக்கலாகிவிடும்’என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மூன்று முறை முதல்வருக்கு கடிதமும் எழுதினாராம். அதற்கும் தீர்வு கிடைக்காத நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் இவ்விஷயத்தை முதலவர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு சென்றாராம் ராதாகிருஷ்ணன். இதையடுத்தே, கொரோனாவுக்குப் பலியான 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கும் கோப்பில் உடனடியாகக் கையெழுத்திட்டாராம் முதல்வர் ஸ்டாலின்.

click me!