புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

By Kanimozhi PannerselvamFirst Published May 17, 2021, 1:31 PM IST
Highlights

இதையடுத்து புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழக கல்வித்துறை செயலாளர்கள் புறக்கணித்துள்ளனர்.

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி அமைச்சர்களுடனும் மத்திய அரசு கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை மத்திய அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

இதையடுத்து புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழக கல்வித்துறை செயலாளர்கள் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு கல்வி அமைச்சரை ஆலோசனைக்கு அழைக்காமல் துறை அதிகாரியை அழைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இட ஒதுக்கீடு தொடர்பாக புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. மும்மொழி கல்வி கொள்கை திணிக்கும் வகையில் உள்ளது என விளக்கம் அளித்துள்ளார். 

குறிப்பாக 3,5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதும், மும்மொழிக் கொள்கையில் கண்டிப்பாக இரண்டு மொழிகள் இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்பதோ இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியாக உள்ளது என்றும் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டியுள்ளார். 2019ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வந்த போதே திமுக அதனை எதிர்த்து வருகிறது. நம்முடைய கருத்துக்கள் அனைத்தும் புறக்கணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். 
 

click me!