வியூகம் அமைத்து கொரோனாவை எதிர்கொண்ட மோடி.. இதைவிட ஒரு அரசு வேறு என்ன செய்ய முடியும்? - அகிலேஷ் மிஷ்ரா

By Asianet TamilFirst Published May 17, 2021, 1:29 PM IST
Highlights

கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது.  வைரஸ் பரவல் குறித்த இந்திய அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும்  எழுந்த வண்ணம் உள்ளன. 

கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது.  வைரஸ் பரவல் குறித்த இந்திய அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும்  எழுந்த வண்ணம் உள்ளன. அதற்கு விடை கொடுக்கும் வகையில், டெல்லி புளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி, இந்த வைரஸ் தொற்றை தடுக்க இந்திய அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது, அது எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன என்பது குறித்து விரிவாக வெளியிட்டுள்ள கட்டுரை பின்வருமாறு: 
 

இரண்டாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தவறி விட்டதா: 

2021 ஜனவரி 1 முதல் 2021 மார்ச் 10 வரை இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே நோய்த்தொற்றுகள் பதிவாகி வந்தன. ஒரு கட்டத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக குறைந்துவிட்டது. அக்டோபர் மற்றும் டிசம்பர் 2020 க்கு இடையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இரண்டாவது அலையை நாடு எதிர் நோக்கி காத்திருந்தது, ஆனால்  முதல் அலை உச்சத்திற்கு பிறகு இரண்டாவது அலையில் இருந்து இந்தியா தப்பித்ததாக  அப்போது கூறப்பட்டது.  இத்தனைக்கும் தற்போது அரசாங்கத்தை மிகக்கடுமையாக விமர்சிக்கும் பல உள்நாட்டு வல்லுநர்கள் கூட  இந்தியாவுக்கு இரண்டாவது அலை என்ற ஒன்று இருக்காது என்றும் பல கட்டுரைகளை எழுதினர். அதேநேரத்தில் இந்தியா முகக் கவசம் அணிதல் போன்ற மீதமுள்ள கட்டுப்பாடுகளை கைவிட்டு  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

சர்வதேச ஊடகங்களான பிபிசியில் 2021 பிப்ரவரி 15 அன்று தொற்றுநோய் இந்தியாவில் முடிவுக்கு வருகிறதா.? என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அதே நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் பல ஊடகங்களும் இதேபோன்ற கட்டுரைகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர். அவர்கள் எழுதிய கட்டுரைகள் அனைத்துமே இந்தியா இரண்டாவது அலையில் இருந்து தப்பித்து விட்டது என்பதுதான். ஆனால் அப்போதும் கூட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு ஓயவில்லை,  ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் நோய்த்தொற்று எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தபோதும் கூட மத்திய அரசு மாநில  அரசுகளுக்கு பல்வேறு பாதுகாப்பு யுக்திகளையும், பாதுகாப்பை குறைக்க வேண்டாம் எனவும் தொடர்ந்து பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும், சுகாதார உட்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும், எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்த போது பிரதமர் மோடி அனைத்து முதலமைச்சர்களுடனும் விரிவான சந்திப்பை நடத்தினார். தொடர்ந்து அரசுகள் விழிப்புடன் இருக்கவும்,  சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவதை கண்டிப்பாக அமல்படுத்தவும், மருத்துவ கட்டமைப்பை உறுதிசெய்ய வெளிப்படையாக அறிவுறுத்தினார். அதிகாரிகள் மற்றும் நிர்வாக நெறிமுறைகள் தடுமாற்றத்தில் இருப்பின் மீண்டு வாருங்கள் என பிரதமர் தலைமையில் பல கூட்டங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக என்ன நடந்தது ? மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகிய பல மாநில நிர்வாகிகள் குறிப்பாக இரண்டாவது அலையில் தோன்றிய மாநிலங்கள் ஒரு கட்டத்தில் தளர்ந்து விட்டன. ஆனால் சமாளித்து அதிலிருந்து மீண்டு வர முயற்சித்தபோது இரண்டாவது அலை எதிர்பார்த்திராத அளவுக்கு  மிகத் தீவிரமாக பரவியது.

கொரோனாவுக்கு மத்தியில் ஏன் தேர்தலை நடத்த வேண்டும்.?

ஆறு  மாதங்களுக்கு ஒரு முறை சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவது கட்டாயமாக இருந்து வருகிறது. சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்துவது அரசியலமைப்பு சட்டத்தின் விதி. எனவே தமிழகம்,  புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம், ஆகிய 5 மாநிலங்களின் தேர்தலை, அரசு தடுக்கும் எனில் அது இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானதாக ஆகிவிடும். எனவே சர்வதேச அளவில் பார்க்கும்போது பல நாடுகளிலும் கொரோனா உச்சத்தில் இருந்தபோது கூட தேர்தல்கள் நடத்தப்பட்டது. இந்தியாவும் 2020 நவம்பரில் பீகாரில் தேர்தல் நடத்தியது. இதில் உண்மையான கேள்வி என்னவென்றால்.? தேர்தலின்போது பெரிய அளவிலான பேரணிகளில் தவிர்திருக்க முடியுமா.? என்பதுதான்.  பீகார் தேர்தலுக்கு முன்னர் பாஜக இந்திய தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து துல்லியமான முன்மொழிவை முன்வைத்தது. உடல் ரீதியான பேரணிகளை புறந்தள்ளி, மெய்நிகர் பிரச்சாரம் மட்டுமே செய்யலாம் என ஆலோசனை வழங்கியது. ஆனால் மற்ற அரசியல் கட்சிகள் இந்த ஆலோசனையை கடுமையாக எதிர்த்தனர்.

பிஜேபி என்பது சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு கட்சி, அக்கட்சிக்கு வேண்டுமானால் மெய்நிகர் பிரச்சாரம் என்பது சாத்தியமாக இருக்கும், தங்களுக்கு அப்படி இல்லை எனக்கூறி பாஜகவின் கருத்தை எதிர்த்தனர். அரசியல் கட்சிகளிடத்தில் ஒருமித்த கருத்து இல்லாததால், தேர்தல் ஆணையத்தை ஒரு கட்டத்திற்கு மேல் அரசால் கட்டாயப்படுத்த முடியாது. செப்டம்பரில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது முதல் அலை உச்சத்தில் இருந்தது. நாளொன்றுக்கு 90 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் நோய்த்தொற்று இருந்தது. ஆனாலும் கூட பாஜகவை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தினர். ஆனால் கொரோனா தொற்று நாள் ஒன்றுக்கு 10,000 ஆக இருந்தபோதுதான் 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டன, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு கடந்த ஐந்து மாதங்களில் பிரம்மாண்ட பேரணியை நடத்தினர், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ராகுல் காந்தியால் மிகப்பெரிய ரோட் ஸோ நடத்தப்பட்டன. பிரியங்கா காந்தி அசாமில் பரவலாக பிரச்சாரம் மேற்கொண்டார், அதேபோல மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் தனது மெகா பேரணிகளை நடத்தினர். அதேபோல் பாஜகவும் போட்டியிடும் இடங்களில் பேரணிகளை செய்தது. ஆனால் மகாராஷ்டிரா அல்லது சத்தீஸ்கர் அல்லது டெல்லி அல்லது பஞ்சாப்பில் தேர்தல்கள் எதுவுமே நடைபெறவில்லை, ஆனால் அங்கு மார்ச் மாத இறுதியில் நோய்த்தொற்று எண்ணிக்கை மிக வியத்தகு அளவில் உயர தொடங்கியது. எனவே தேர்தல் பேரணிகள் நடத்தியதால் தான் நோய்த்தொற்று பரவியது என குற்றம்சாட்டுவது ஏற்க இயலாது.

ஹரித்துவார் கும்பமேளாவைப் பற்றி:

கும்பமேளா இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் மதக் கூட்டமாகும். அதன் தேதி அரசால் நிர்ணயிக்கப்படுவது அல்ல. அதன் தேதி மற்றும் நேரம் மதகுருமார்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கோவில் தொற்று எண்ணிக்கை குறைந்துவிட்டதால் முன்மொழியப்பட்ட தேதிகளில் நிபந்தனைகளுடன்,  நுழைவுவாயிலில் சோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் பிற மருத்துவ நெறிமுறைகளைப் பின்பற்றி மிககடுமையான நெறிமுறைகளுடன் கும்பமேளா நடைபெற்றது. ஏப்ரல் 1ஆம் தேதி கும்பமேளா தொடங்கியபோது இந்தியாவில் 72 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களின் நோய்த் தொற்று எண்ணிக்கை மட்டும் இதில் அடங்கும்.

இது எதுவுமே கும்பமேளாவால் ஏற்படவில்லை ஏப்ரல்-1 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் 293 பேர் பாதிக்கப்பட்டனர், ஏப்ரல் 8ஆம் தேதி 1500 ஆக அங்கு பதிவானது. எவ்வாறாயினும் நாடு முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்த நிலையில் பிரதமர் மோடி தலையிட்டு அக்கூட்டத்தை சரியான தேதிக்கு முன்பு முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படியே அவர்களும் செய்தனர்.

இந்தியாவின் தடுப்பூசி யுக்தி சரியானதா.?

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சினுக்கு இந்திய அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது. இதில் கோவேக்சின் முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பாகும். பிரதமர் மோடியால் அனுமதிக்கப்பட்டது. ஆனால் கோவேக்சினுக்கு எதிராக பல தீய பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.  குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மிகவும் பொறுப்பான அரசியல்வாதிகள் மற்றும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அந்த பிரச்சாரம் நடைபெற்றது. ஆனாலும் கூட மத்திய அரசு இந்தியாவில் 2021 ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி இயக்கத்தை முறையாக தொடங்கியது. இது மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. வைரசால் பாதிக்கப்படக்கூடியவர்களிடையே இறப்பை குறைக்கவும், பின்னர் நோய் பாதிப்பில் இருந்து மீளவும், அதன்படி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி திட்டம் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது.  பிப்ரவரி 2ஆம் தேதி முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.  மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டது. இதுவரை 182 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகிலேயே இதுவே அதிகமான எண்ணிக்கை ஆகும். அதேநேரத்தில் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள மருந்து கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிற நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசிகள், ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசியை அளிக்கவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் பல இந்தியாவிற்கு வருவதற்கான செயல்பாடுகளும் உள்ளன. 2021 க்குள் மத்திய அரசு கிட்டத்தட்ட 2.16 பில்லியன் டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்ய முன்வந்துள்ளது.

உள்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னர் இந்தியா ஏன் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது என்ற கேள்வி கேட்கப்படுகிறது, மே-11 2011 நிலவரப்படி இந்தியா மொத்தம் 66. 3698 மில்லியன் தடுப்பூசி அளவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்குள் சுமார் 3 மடங்கு தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்தக் கடமைகள் இருந்தன, அந்த அடிப்படையில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. குறிப்பாக மூலப் பொருட்கள் கூடுதலாக தேவைப்படும் காலங்களில் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் துணை நிற்பது இந்தியாவின் பாரம்பரியம் ஆகும்.  அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இருவரும் சமீபத்தில் உறுதிப்படுத்திய படி கடந்த ஆண்டு உலகத்திற்கு தேவை ஏற்பட்டபோது, மருந்துகள் மற்றும் பிற பொருட்களுடன் இந்தியா உலகிற்கு உதவியது. இந்தியாவுக்கு இப்போது உதவி  தேவைப்படும்போது உலகம் இந்தியாவுக்கு நன்றிக்கடன் செய்ய முன்வந்துள்ளது.

மருத்துவ உட்கட்டமைப்பு பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளதா.?

மார்ச் 25-2020 அன்று இந்தியாவில் 10,180 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 1.6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. அதே காலகட்டத்தில் ஐசியு படுக்கைகள் 2,168 இலிருந்து 92 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்துள்ளன. முதல் அலை உச்சத்தில் இருந்த போது  700 மெட்ரிக் டன் என்ற  இந்தியாவின் தினசரி மருத்துவ ஆக்சிஜன் தேவை, திடீரென ஒரு சில நாட்களில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் மெட்ரிக் டன் வரை உயர்ந்தது. கிட்டத்தட்ட 1200 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது.  இதனால் உற்பத்தி என்பது மிகவும் சவாலாக மாறியது, அதிலும் பெரிய சவால்கள் சிலிண்டர்கள், போக்குவரத்து மற்றும் முழு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டது.  இது மிகவும் வேதனையான நாட்கள் ஆகும்.  

அதேநேரத்தில் ரெம்டெசிவீர் போன்ற மருந்துகளின் உற்பத்தி மாதத்திற்கு சுமார் 4 மில்லியனில் இருந்து ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 மில்லியனாக அதிகரித்துள்ளது. மனித வளத்தை அதிகரிக்க நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவ பயிற்சியாளர்களை முழு பாதுகாப்பு நெறிமுறை மற்றும் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஆக்சிஜன் சிலிண்டர், போக்குவரத்து, தளவாட பொருட்களை பாதுகாப்பதற்காகவும் பல நகரங்களில் ஆக்சிஜன் உள்ளிட்ட அவசர மருத்துவ வசதிகளை அமைப்பதற்காகவும் ஆயத்த பணிகளை அணிதிரட்டுவதையும், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். 

மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உருவாக்கும் தளவாடங்கள்,  ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 162 தவிர 551 புதிய உற்பத்தி அலகுகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. டிஆர்டிஓ மூலம் மேலும் 500 மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க பிஎம் கேர் நிதி பயன்படுத்துகிறது. இதனால் மொத்தம் 1200 க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்கள் உருவாக்கப்படும். இது நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வசதியை உறுதி செய்யும். வென்டிலேட்டர்களை நிறைய வாங்கவும், பிஎம்கேர் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.  200 மில்லியன் இந்தியர்களை உள்ளடக்கிய இலவச உணவு மற்றும் விவசாய திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்கு எதிராக போராடுவதில் இந்தியா மிகவும் பலமானது என்பதை நிரூபித்துள்ளது.

அடுத்தது என்ன.?

இந்தியா இரண்டாவது அலைகளை முழுமையான அர்பணிப்புடனும், உறுதியுடனும் போராடி வருகிறது. தற்போது நோய்த்தொற்றின் எண்ணிக்கை சராசரியாக 7 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாக குறையத் தொடங்கியுள்ளது.  மருத்துவ உட்கட்டமைப்பு தொடர்பாக எழுந்த கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடிந்த அளவு உத்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உருவாகியுள்ள  நெருக்கடியான நிலையை இந்தியா விரைவில் பூர்த்தி செய்யும்.  இரண்டாவது அலைக்கு எதிராக இந்தியா நடத்திவரும் போரின் கதாநாயகர்களாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும்  முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு சேவை விரைவில் நல்ல பலனைத்தரும். 
 

click me!