அடிதூள்.. சென்னையில் சரிந்தது கொரோனா.. நோய்த் தொற்று விகிதம் வீழ்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published May 17, 2021, 12:21 PM IST
Highlights

அதன்படி நோய் பரவல் விகிதம் சென்னையில் மே-10 ஆம் தேதி 26.55% ஆக இருந்தது அது படிப்படியாக குறைந்து தற்போது 21.2% ஆக குறைந்துள்ளது. இதுவரை மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரத்து 391 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கம், போன்ற  சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரிப்பதாகத் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன. 

நேற்று மட்டும் சென்னையில் 29,531 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 6247 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து பார்த்தால் சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 21.2% ஆகா குறைந்துள்ளது. 100 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கையே கொரோனா பரவல் விகிதம் என்று அழைக்கப்படும். 

அதன்படி நோய் பரவல் விகிதம் சென்னையில் மே-10 ஆம் தேதி 26.55% ஆக இருந்தது அது படிப்படியாக குறைந்து தற்போது 21.2% ஆக குறைந்துள்ளது. இதுவரை மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரத்து 391 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 297 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 47 ஆயிரத்து 330 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும்  5764 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!