பேட்டைக்காரனான பழனிசாமி... கே.பி.கறுப்புவாக கெத்து காட்டும் தினகரன்...!

First Published Jun 26, 2018, 12:13 PM IST
Highlights
Edappadi upset dinakaran Hawala case judgements


அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தினகரனுக்கு சாதகமான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட நகர்வு பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளார்.

‘இங்கிலாந்தின் பார்க்லே வங்கியில் 1 கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலரை முறைகேடாக, டிப்பர் இன்வஸ்மென்ட் என்ற நிறுவனம் மூலமாக பணம் டெபாசிட் செய்திருக்கிறார் தினகரன்! ஐரோப்பிய யூனியனில் ஒரு ஹோட்டல் பெயரில் மூன்று நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் 36.36 லட்சம் அமெரிக்க டாலரும், 1 லட்சம் பவுண்டு வரை அந்நிய செலாவணி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார் தினகரன்!’. இந்தக் காரணங்களை சொல்லித்தான் டி.டி.வி தினகரன் மீது 1996ல் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

வழக்கு தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தினகரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அப்போது வழக்குகளின் ஆவணங்களை கேட்டு தினகரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு ஆவணங்களை மனுதாரருக்கு கொடுக்குமாறு உத்தவிட்டது. மேலும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிக்கும் இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

ஆனால் ஆறுமாத கால அவகாசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் தினகரன் தரப்பு வழக்கறிஞர். ’இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே இரண்டு மனுக்கள் இருப்பதால் ஆறுமாதங்களுக்குள் வழக்கை முடிப்பது கடினம்’ என்றிருக்கிறார் தினகரன் வழக்கறிஞர். எனவே மீண்டும் பரிசீலித்து ஆறுமாத கால அவகாசத்தை ரத்து செய்துள்ளது நீதிமன்றம்.

இந்த வழக்கின் போக்கை உன்னிப்பாக கவனித்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. அரசியல் ரீதியாக தினகரனை சமாளிக்க திணரும் பழனிசாமி அணி, இந்த வழக்கில் தினகரனை சிக்கவைக்க காத்திருந்தது. ஆனால் தினகரனுக்கு சாதகமாகவே அனைத்தும் நடப்பதால் அப்செட்டில் இருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி அணியினர்.

‘அந்த சாவ அவ்ளோதாண்டா... எனக்கு தெரியாதா...?’ என்கிற ரீதியில் ஆடுகளம் பேட்டைக்காரனை போல தனது ஆதரவாளர்களிடம் இந்த வழக்கை குறித்து பேசி வந்தாராம் பழனிசாமி. ஆனால் முதல் ரவுண்டிலயே ஜெயித்து நிற்கிறார் தினகரன். இந்த வெற்றி அனைத்திலும் தொடர்ந்து வர வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் தினகரன் தரப்பினர்.

click me!