ஜெ சமாதியில் எடப்பாடி..!! அடுத்த அதிரடிக்கு அச்சாரமா?

 
Published : Jul 08, 2017, 03:28 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
ஜெ சமாதியில் எடப்பாடி..!! அடுத்த அதிரடிக்கு அச்சாரமா?

சுருக்கம்

Edappadi tribute at jayalalitha

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சென்று அஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா சமாதிக்கு சென்று யாராவது முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினாலே பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. முதலமைச்சராக இருந்து ராஜினாமா செய்த ஓ பன்னீர்செல்வம் ஜெ.சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பின்னர் தான் தமிழக அரசியல் சூழ்நிலையே இரண்டாகி போனது.

ஏற்கனவே டிடிவி தினகரனுடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கும் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக டிடிவியிடம் தஞ்சம் அடைந்திருப்பதால் எடப்பாடி கோஷ்டி அதிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று மொடக்குறிச்சி எம்எல்ஏ சிவசுப்பிரமணியனும் தினகரனிடம் தஞ்சம் அடைந்ததால் எடப்பாடியின் பலம் குறைந்து கொண்டே செல்கிறது.

இதனால் தினகரன் தரப்பில் இருந்து எடப்பாடிக்கு தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக தெரிகிறது. இந்த நிலையில் மாலை 3 மணியளவில் முன் அறிவிப்பு இன்றி ஜெ சமாதிக்கு எடப்பாடி சென்றதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆனால் ஜெ சமாதிக்கு சென்றதில் எந்த வித அரசியல் காரணமும் இல்லை என திட்டவட்டமாக மறுக்கிறது எடப்பாடி தரப்பு.

சட்டபேரவையில் மானிய கோரிக்கை மீதான கேள்விகளுக்கு வெற்றிகரமாக பதில் அளித்து விட்டதால் மன திருப்தியோடு ஆசிர்வாதம் வாங்குவதற்காகவே ஜெ சமாதிக்கு சென்றதாக கூறுகின்றனர் ஆதரவாளர்கள். 

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!