யார் விமர்சித்தாலும் கதை கூறுவதை நிறுத்தமாட்டேன் - அடம்பிடிக்கும் எடப்பாடி...

 
Published : Sep 30, 2017, 05:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
 யார் விமர்சித்தாலும் கதை கூறுவதை நிறுத்தமாட்டேன் - அடம்பிடிக்கும் எடப்பாடி...

சுருக்கம்

edappadi said No matter who criticizes I will not stop telling the story

யார் என்ன விமர்சித்தாலும் கதை சொல்வதை நான் நிறுத்தமாட்டேன் எனவும், அவர்கள் விமர்சிப்பது மூலம் நான் கூறும் கதையை முழுவதும் கேட்கிறார்கள் என்பதை  அறிகிறேன் எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. 

இதனால் மாதந்தோறும் அதிமுக சார்பில் கூட்டம் நடைபெற்று வருவது வழக்கம். இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள். 

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு கதையை கூறி விளக்கம் சொல்வார். அந்த விளக்கம் அவரின் எதிரணிக்கு சவுக்கடி கொடுப்பது போல் இருக்கும். இதனால் இவர் கதை கூறுவதை எதிரணியினர் விமர்சித்து வந்தனர். 

அதன்படி, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா இன்று தொடங்கியது.  

அப்போது, எம்.ஜி.ஆர்.புகைப்படக் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

பின்னர், பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யார் என்ன விமர்சித்தாலும் கதை சொல்வதை நான் நிறுத்தமாட்டேன் எனவும், அவர்கள் விமர்சிப்பது மூலம் நான் கூறும் கதையை முழுவதும் கேட்கிறார்கள் என்பதை  அறிகிறேன் எனவும், தெரிவித்தார். 

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது குற்றமா? அது என்ன அந்நிய அரசா? எனவும், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தான் தமிழக திட்டங்கள் நிறைவேறி வருகின்றன எனவும் தெரிவித்தார். 

7 மாதங்களில் 3,563 கோப்புகளை பார்த்து பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன் எனவும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். 

விவசாயிகளின் நண்பனாக அதிமுக அரசு விளங்குகிறது எனவும், ஏழை, எளியோருக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிக நிதி வழங்கப்பட்டு வருவதாகவும், சுகாதாரத்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். 

திருமண உதவி திட்டத்தில் ஏராளமான பெண்கள் சேலம் மாவட்டத்தில் பயனடைந்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..