தீய சக்திகளை அழிக்கும் ஆயுதம் அதிமுக - ஒபிஎஸ் பெருமிதம் 

 
Published : Sep 30, 2017, 04:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
தீய சக்திகளை அழிக்கும் ஆயுதம் அதிமுக - ஒபிஎஸ் பெருமிதம் 

சுருக்கம்

Jayalalithaas regime can not be dissolved and destroying the evil forces Deputy Chief Minister Panneerselvam said.

ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது எனவும், தீய சக்திகளை அழிக்கும் ஆயுதம் அதிமுக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. 

மாதந்தோறும் அதிமுக சார்பில் கூட்டம் நடைபெற்று வருவது வழக்கம். இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள். 

அதன்படி, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா இன்று தொடங்கியது.  

அப்போது, எம்.ஜி.ஆர்.புகைப்படக் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

பின்னர் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது எனவும், தீய சக்திகளை அழிக்கும் ஆயுதம் அதிமுக தெரிவித்தார். 

மக்களின் ஆதரவும் கொண்ட ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது எனவும், ஆட்சியை தீயகுணம் கொண்டவர்களால் கலைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். 

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் நல்ல கருத்துகளை கொண்டு சென்றவர் எம்.ஜி.ஆர் எனவும், எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில்தான் தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது தெரிவித்தார். 

எத்தனை சித்து வேலைகள் செய்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

வங்கதேச தேசத்தின் அடுத்த பிரதமராகும் ‘இருண்ட இளவரசர்’..? யார் இந்த ‘டேஞ்சரஸ்’ தாரிக் ரஹ்மான்..?
அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!