
சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகன், கோடநாடு பங்களாவில் 5 பேர் மரணமடைந்து விட்டனர் என்றும் கோடநாடு பங்களாவில் என்னதான் நடக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகனின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு மரணங்கள் குறித்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கோடநாடு பங்களாவின் காவலாளி ஒருவரைக் கொன்று விட்டு அங்கிருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரை 11 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகன், கோடநாடு கொலை சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, கோடநாடு மரணங்கள் குறித்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
ஜெயலலிதாவின் ஓட்டுநராக பணிபுரிந்த கனகராஜ், கூட்டு சதியில் ஈடுபட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
கொள்ளையடிக்க முயன்றோர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டது பாராட்டுக்குரியது என்றார்.
கைக்கடிகாரம், அலங்காரப் பொருட்கள் மட்டுமே கொள்ளை போனதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.