
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேச வாய்ப்பளிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இது சில நாட்களுக்குப் பிறகு, எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, டிடிவி தினகரன் அணி என மூன்றாக பிரிந்துள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மீதான மானியக்கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
மானியக் கோரிக்கை விவாதத்தில் எடப்பாடி அணியினர் பங்கேற்று வருகின்றனர். ஆனால், ஓ.பி.எஸ். அணியினருக்கு பேச வாய்ப்பு அளிக்க மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்தனர்.
அப்போது, ஓ.பி.எஸ்., சபாநாயகர் தனபாலிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்று வரும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேச வாய்ப்பளிக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.