
கழகம் ஓ.பி.எஸ் பின்னால்தான் உள்ளது தமிழகத்தில் நடைபெற்று வரும் செயல்வீரர்கள் கூட்டமே சாட்சியாக அமைந்துள்ளது என்று அதிமுக ஓபிஎஸ் அணி ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் , எடப்பாடி அணிகள் இணைப்பு குறித்து விவாதம் எழுந்து வரும் நிலையில் ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் எடப்பாடி அணியுடன் பேசிக்கொண்டிருக்க , மைத்ரேயன் , கே.பி.முனுசாமி போன்றோர் இணைப்பை எதிர்த்து வருகின்றனர்.
கட்சி தங்கள் கையில் தான் உள்ளது , என சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் டெல்லியில் பேட்டியளித்தார். இந்நிலையில் இன்று தாம்பரத்தில் பேட்டி அளித்த மைத்ரேயன் கூறியதாவது:
கட்சி இணைப்பு பற்றி பேசுகிறார்களே ?என்ற கேள்விக்கு ...
இ.பி.எஸ் அவர் அணியை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார் நாங்கள் எங்கள் பாதையை நோக்கி நாங்கள் பயணித்துக்கொண்டு இருக்கிறோம் தமிழகத்தில் மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறோம்.
செல்லும் இடம் எல்லாம் ஓ.பி.எஸ் அவர்களுக்கு ஆதரவாக செயல்வீரர்கள் வந்துகொண்டிருகிறார்கள் கழகம் ஓ.பி.எஸ் அவர்கள் பின்னால்தான் இருக்கிறது என்பதற்கு நடைபெற்று வரும் செயல்வீரர்கள் கூட்டமே சாட்சி.
சென்னையில் வரும் அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார்.