எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் அதிமுகவிலிருந்து நீக்கம்.. போஸ்டர் ஒட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதகளம்!

By Asianet TamilFirst Published Jul 3, 2022, 9:29 PM IST
Highlights

திண்டுக்கல் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். 

அதிமுகவில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்தது. அன்று முதல் அந்த விவகாரம் அதிமுகவில் கனலாக கனன்றுகொண்டிருக்கிறது. ஒற்றைத் தலைமையாக இபிஎஸ்ஸுக்கு ஆதர்வாக அதிமுகவில் பெரும்பாலோனர் அணி திரண்ட நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஓபிஎஸ். இந்த விவகாரத்துக்கு ஜூன் 23 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 23 தீர்மானங்களைத் தாண்டி வேறு எந்தத் தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பெற்ற உத்தரவால் ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் இன்னும் பேசுபொருளாகவே இருக்கிறது..

இதையும் படிங்க: ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க ஓபிஎஸ் அழைக்கப்படுவாரா.? சஸ்பென்ஸ் வைத்து பேசும் ஜெயக்குமார்.!

ஜூன் 23 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. அதே வேளையில் கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் ஆகியோர் கோரிக்கையை ஏற்று ஜூலை 11 அன்று மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். ஆனால், இந்தப் பொதுக்குழு சட்ட விரோதம் என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருக்கிறார். இபிஎஸ் தரப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றையும் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் தங்கள் கருத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கண்டிப்பாக இருக்க வேண்டும்.. ட்விஸ்ட் வைத்து பேசிய வி.கே. சசிகலா.!

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் நீயா, நானா என்ற பாணியில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க, இந்த ஒற்றைத் தலைமை விவகாரம் பெரிதாகப் பேசபட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களிடம் பேசியதுதான் காரணம். மேலும் தற்போது ஓபிஎஸ்ஸை குறி வைத்து ஜெயக்குமார் விமர்சிக்கவும் தொடங்கியிருக்கிறார். இதனால், தொடக்கம் முதலே ஜெயக்குமார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோபத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் திண்டுக்கல்லில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அந்தக் கோபத்தை போஸ்டர் அடித்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

திண்டுக்கல் வத்தலக்குண்டு பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த போஸ்டரில், ‘அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், கே.பி. முனுசாமி ஆகியோரை நீக்கிவிட்டோம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். மேலும் `முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். அவருக்கே வத்தலக்குண்டு மக்கள் ஆதரவு.” என்றும் அந்த போஸ்டரில் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: நெருங்கும் பொதுக்குழு கிளைமாக்ஸ்.. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஸுக்கு கல்தா.? இபிஎஸ் தரப்பின் புது ஸ்கெட்ச்.!

click me!