அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.! அமித்ஷாவை சந்தித்த பிறகு பல்டி அடித்த எடப்பாடி பழனிசாமி

By Ajmal Khan  |  First Published Apr 27, 2023, 9:57 AM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லையென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


அமித்ஷாவை சந்தித்த இபிஎஸ்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டியால் பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம்,  தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து விவாதிக்கப்ப்டது. இதனை பிறகு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் டெல்லியில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என தெரிவித்தார். 

Latest Videos

undefined

அண்ணாமலையோடு பிரச்சனை இல்லை

அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் எந்த வித முரண்பாடும் இல்லை. பிரச்சனையும் இல்லை,  ஊடகங்கள் வேண்டுமென்றே அவர் அப்படி சொல்கிறாரே, இப்படி சொல்கிறாரே என கேட்பதால், அது பற்றி பேச வேண்டாம் என்று சொன்னேன். ஒவ்வொரு கட்சிக்கும் தனித் தனி கொள்கைகள் உள்ளதாகவுமெ தெரிவித்தார். தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பேசியதாக வெளியான ஆடியோவில் உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. முப்பதாயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக அமைச்சரே கூறியுள்ளார். உதயநிதி,சபரீசன் தொடர்பான ஆடியோ குறித்து ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.  திமுக அரசு செய்யும் தவறுகளை  அதன் கூட்டணிக் கட்சிகளை சுட்டிக் காட்டுவதில்லையெனவும். 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விசாரணை நடத்த வேண்டும்

ஒரு முறை காங்கிரஸ் கட்சி எதிர்த்து கருத்து  கூறவில்லையென தெரிவித்தார். தற்போது ஆனால் எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அந்த கட்சிகளின் அவர்கள் கொள்கைக்கு படி சுதந்திரமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.திமுக அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் ஆதிதிராவிடர், விவசாயிகள் நலன், வருவாய்த்துறை என பட்ஜெட்டில் ஒதுக்கிய 28,868 கோடியே திமுக அரசு செலவு செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசு என தெரிவித்தவர், ஆனால் குற்றவாளிகளுக்காக ஆஜராகி வாதாடியது திமுக வழக்கறிஞர் என குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடு..! இல்லைனா பதவியை ராஜினாமா செய்.! ஸ்டாலினுக்கு எதிராக சீறும் ஆர் பி. உதயகுமார்

click me!