அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த பேசிய நிலையில், தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை சீட் ஒதுக்குவீங்க என்பதை இப்போதே தெரிவிக்க வேண்டும் என அமித்ஷா கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக- பாஜக மோதல்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்ட போராட்டத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தலிலுலம் அதிமுக பொதுச்செயலாளரக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இந்திநலையில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் கரணமாக கூட்டணிக்குள் பிரச்சனையானது உருவானது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
undefined
அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி
மேலும் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாகவும், ஆனால் கூட்டணி தொடர்பாக அண்ணாமலையோடு பேச வேண்டிய தேவையில்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருந்தார். இதன் அடிப்படையில் தன்னை டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், வேலுமணி, கேபிமுனுசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்துள்ளார். அப்போது இரு தரப்பிலும் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேசப்பட்டது. மேலும் இரண்டு தரப்பும் தேர்தலில் பிரிந்து சென்று சந்தித்தால் தோல்விதான் கிடைக்கும் என கூறப்பட்டது. எனவே வரும் நாட்களில் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
பாஜகவிற்கு எத்தனை சீட்
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலத்திற்கும் குறைவான நாட்களே இருப்பதால் தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பதை இப்போதே கூற வேண்டும் என அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி அதிமுக மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், தற்போதே எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என கூற முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தலைவர் அண்ணாமலை 25 இடங்களில் கைப்பற்றுவோம் என கூறிவருகிறார். மேலும் 11 தொகுதிகளை இலக்காக வைத்தும் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக தரப்போ குறைந்த பட்சம் 5 தொகுதிகளை பாஜகவிற்கு ஒதுக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்