31,000 கோடி ஊழல் குறித்து தனக்கு தொடர்பு இல்லை என சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் இல்லையென்றால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
31 ஆயிரம் கோடி ஊழல்
அதிமுகவில் புதிதாக இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தில், கிராமங்கள்தோறும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் முன்னிலையில் பேசிய ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடுகள் ஆடுகள் திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், மடிக்கண்ணி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். தமிழக மக்களுக்கு விடியல் தருவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால்.ஆனால் இன்றைக்கு 31,000 கோடியை கொள்ளையடித்து அந்த பணத்தை எப்படி மாற்றுவது உதயநிதிக்கும், சபரீசனுக்கும் தெரியவில்லை என கூறினார்.
சிபிஐ விசாரணை நடத்திடுக
நான் இதை சொல்லவில்லை தமிழக அரசின் பிரதான அமைச்சராக இருக்கிற பி.டி ஆர் பழனிவேல் ராஜன் சொல்லியிருப்பதாக தெரிவித்தார். சீதை பத்தினி என்று சொன்னாலும், ராவணன் கடத்தி சென்ற காரணத்தினாலே, சீதை தீக்குளித்து தான் பத்தினி என்று உலகத்திற்கு தர்மத்தை நிலை நாட்டியது போல, திராவிட முன்னேற்றக் கழகம் சீதை போன்று அவர்கள் பத்தினியாக இல்லை என்றாலும் கூட, இன்றைக்கு உண்மை தன்மையை உலகத்திற்கு செல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. எனவே நிதி அமைச்சர் கூறிய 31 ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு அவர்கள் பரிந்துரை செய்யவில்லை என்று சொன்னால், திராவிட முன்னேற்ற ஸ்டாலின் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் திருட்டு குறித்து கிராம நிர்வாக அதிகாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதையடுத்து அந்த அதிகாரி பட்டப்பகலில் அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளனர். இதற்கு ஒரு கோடியை நிவராணமாக ஸ்டாலின் கொடுத்துள்ளார் .பணம் கொடுத்தால் போதுமா ,உயிர் திருப்பி வருமா அவர் என்ன பாவம் செய்தார். இன்றைக்கு அரசு ஊழியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்