வீரவணக்க நாள் கூட்டம்..! அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி

By Ajmal KhanFirst Published Jan 18, 2023, 10:59 AM IST
Highlights

வீரவணக்க நாளையொட்டி அதிமுக சார்பாக வருகிற 25ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த முன்னாள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு  எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வீரவணக்க நாள் கூட்டம்

வீரவணக்க நாள் கூட்டம் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25-ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும். அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் 25.1.2023 புதன் கிழமை அன்று, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டத் தலைநகரங்களில் "வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.

இபிஎஸ்யை காலி செய்து, இரட்டை இலையை முடக்கி விடுவேன் என எச்சரித்த அண்ணாமலை.? கிஷோர் கே சாமி பரபரப்பு தகவல்

அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு

கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள். சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், அறிவிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளுடனும்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு உள்ளிட்ட அணைத்து பிரிவு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

தலைமை கழகத்திற்கு அறிக்கை

மேலும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிர்வாகிகளின் பட்டியலையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஒரே நாடு ஒரே தேர்தல்..! அறிவியல் தேர்வையும், கணித தேர்வையும் ஒன்றாக எழுத முடியுமா.? முரசொலி கடும் விமர்சனம்

click me!