நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்து, நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில், நாங்கள் இரட்டை வேடமோ, இரட்டை நிலைப்பாடோ எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்துவதால் அதிமுக மாநாட்டிற்கு கூட்டம் வராது என எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறாரா? அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்து, நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில், நாங்கள் இரட்டை வேடமோ, இரட்டை நிலைப்பாடோ எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற முயற்சியா?ஆளுநருக்கு எதிராக ஆதாரத்துடன் இறங்கி அடிக்கும் அமைச்சர் ரகுபதி
மேலும், அதிமுக மாநாட்டுக்கு கூட்டம் வராது என்று இப்போதே பயம் வந்துவிட்டது. அதிமுக மாநாட்டை திமுக தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக மாநாட்டிற்கு மக்களே செல்லவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. நாங்கள் எங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துகிறோம்.
இதையும் படிங்க;- அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையே போச்சு! ஓட்டேரி காவலரின் கதறல் நெஞ்சை உறைய வைக்கிறது! டிடிவி.தினகரன்.!
இந்த உண்ணாவிரத போராட்டம் மாபெரும் வெற்றி அடையும். தமிழக மக்களின் உணர்வை மத்திய அரசிற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம். அதிமுக மாநாட்டிற்கு போட்டியான போராட்டம் இது அல்ல. அதிமுகவினர் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், அழகர் கோயில், மீனாட்சியம்மன் உல்லாச பயணம் போகலாம் என்று கூறியே மதுரை மாநாட்டிற்கு மக்களை திரட்டி வருகின்றனர். எனவே, எடப்பாடி பழனிசாமி கூறுவது அர்த்தமில்லாத குற்றச்சாட்டை கூறி வருகிறார் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.