ரெட் ஜெயண்ட் முதல் கள்ளச்சாராய மரணம் வரை... திமுக அரசின் முறைகேடுகளை பட்டியலிட்டு ஆளுநரிடம் கொடுத்த இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published May 22, 2023, 3:06 PM IST

2010 ஆம் ஆண்டில் இருந்து 2020 வரை வருடத்திற்கு 2 படம் தான் ரெட் ஜெயண்ட் எடுத்தார்கள். ஆனால் தற்போது  ஆண்டுக்கு 50 படங்கள் விநியோகம் செய்வதாக தெரிவித்தார். திமுகவின் ஊழல் பணம் முழுவதும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது போல தெரிகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
 


ஆளுநரை சந்தித் எடப்பாடி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராய மரணம், திமுக அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்தார். முன்னதாக சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த சந்திக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்து அதிமுக சார்பில் திமுக அரசின் இரண்டாண்டு  கால ஆட்சியில் நடைப்பெற்ற ஊழல் குறித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து புகார் அளித்ததாக தெரிவித்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட ஆளுநர் பரிசீலிப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

Latest Videos

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் மக்கள் படும் அவதி குறித்து எடுத்துரைத்த்தாகவும். திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகள் என்ற தலைப்பில் என்னென்ன ஊழல் நடந்துள்ளது என்பது குறித்து பட்டியலோடு தெரிவித்துள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் வி ஏ ஓ கொலை விவகாரம், சேலம் மாவட்டத்தில் வி ஏ ஓ கொலை முயற்சி சம்பவம் குறித்தும்  புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். கள்ளச்சாரய மரணங்கள் குறித்து புகார் அளித்துள்ளோம். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் கள்ளச்சாராய மரணங்கள் தடுத்திருக்கலாம். கள்ளச்சாராய மரணம் நடந்த உடன் 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றால் அரசுக்கும் காவல்துறைக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்காமல் பொம்மை முதலமைச்சர் போல ஸ்டாலின் செயல்படுகிறார்.  

30 ஆயிரம் கோடி ஊழல்

காவல்துறை கொள்ளை விளக்க குறிப்பில் கடந்த 13 வருடங்களாக கள்ளச்சாராய மரணங்கள் இல்லை என அரசு சமீபத்தில் வெளியிட்டது. பொய்யான தகவலை செந்தில் பாலாஜி வெளியிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தொடர்பாகவும்  புகார் அளித்துள்ளதாக தெரிவித்தவர், 2010 ஆம் ஆண்டில் இருந்து 2020 வரை வருடத்திற்கு 2 படம் தான் எடுத்தார்கள். ஆனால் தற்போது  ஆண்டுக்கு 50 படங்கள் விநியோகம் செய்வதாக தெரிவித்தார். திமுகவின் ஊழல் பணம் முழுவதும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது போல தெரிகிறது என குற்றம்சாட்டினார்.  30 ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக பிடிஆர் ஆடியோவில் உண்மை தன்மை இருப்பதால்தான் அவர் டம்மியான துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சிபிஐ விசாரணை நடத்தனும்

தஞ்சாவூரில் இரண்டு நபர்கள் டாஸ்மாக் பாரில் மது அருந்திதால் உயிரிழந்த விவகாரத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் வைத்து அவருடைய உடல் கூறாய்வு நடத்தப்பட வேண்டும். இந்த மரணத்தில் உண்மை தன்மையை அறிய வேண்டும் என கேட்டுக்கொண்டவர்,  கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக மதிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி உண்மை தன்மையை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இதையும் படியுங்கள்

திமுகவில் இருந்து பி.டி.ஆரின் தீவிர ஆதரவாளர் மிசா பாண்டியன் திடீர் நீக்கம்..! காரணம் என்ன தெரியுமா.?

click me!