இங்க பாரு 27 இல்ல 270 அமாவாசை வந்தாலும் அதுமட்டும் நடக்கவே நடக்காது.. எடப்பாடியை எகிறி அடிக்கும் ப.சிதம்பரம்

Published : Feb 16, 2022, 08:12 AM ISTUpdated : Feb 16, 2022, 08:13 AM IST
இங்க பாரு 27 இல்ல  270 அமாவாசை வந்தாலும் அதுமட்டும் நடக்கவே நடக்காது.. எடப்பாடியை எகிறி அடிக்கும் ப.சிதம்பரம்

சுருக்கம்

 சட்டமன்றத்தை முடக்குவோம் என்கின்றனர். சட்டப்பேரவையை யாராலும் முடக்க முடியாது. அரசியல் சாசனத்தை படிக்காதவர்கள் தான் இதுபோன்று பிதற்றுவார்கள். நீதிமன்ற தீர்ப்பும் தெளிவாக உள்ளது. நான் இந்த கடுமையான வார்த்தையை பயன்படுத்திவிட்டதால் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

சட்டப்பேரவையை யாராலும் முடக்க முடியாது. அரசியல் சாசனப்படி அது முடியாது என  முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது போகும் இடமில்லாம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேலும், 27 அமாவாசை பிறகு ஆட்சி மாற்றம் உறுதி என்று கூறிவருகின்றனர். 

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ்,  திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது அவர் பேசுகையில்;- சட்டமன்றத்தை முடக்குவோம் என்கின்றனர். சட்டப்பேரவையை யாராலும் முடக்க முடியாது. அரசியல் சாசனத்தை படிக்காதவர்கள் தான் இதுபோன்று பிதற்றுவார்கள். நீதிமன்ற தீர்ப்பும் தெளிவாக உள்ளது. நான் இந்த கடுமையான வார்த்தையை பயன்படுத்திவிட்டதால் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சட்டப்பேரவையை முடக்குவோம் என்கிறார்கள். இதுபோன்ற வார்த்தைகளை முன்னாள் முதல்வர்கள் பயன்படுத்தக்கூடாது. 

2024ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரும் என்றும் 27 அமாவாசையில் தேர்தல் வரும் என பேசுகின்றனர். 27 அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது. 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி முதல்வராக முடியாது. உள்ளாட்சியில் இரண்டு லட்சம் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணிகளை ஒரு அமைச்சரால் பார்க்க முடியாது. சட்டப்பேரவை தேர்தல் முடிந்து 8 மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுகிறது, இதுவும் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றுதான். இதுவரை 12 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். ஒவ்வொன்றாகத்தான் நிறைவேற்ற முடியும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!