சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு வாக்களிக்க சொன்னவரே இபிஎஸ் தான்.. இப்போ மாத்தி பேசுறாரு.. ஓபிஎஸ் விளாசல்..!

Published : Jan 12, 2024, 08:08 AM ISTUpdated : Jan 12, 2024, 08:18 AM IST
சிஏஏ  சட்டத்திற்கு ஆதரவு வாக்களிக்க சொன்னவரே இபிஎஸ் தான்.. இப்போ மாத்தி பேசுறாரு.. ஓபிஎஸ் விளாசல்..!

சுருக்கம்

என்னுடைய உடம்பில் ஓடும் இரத்தம் அதிமுக ரத்தம். தீர்ப்புகளின் மூலமாக வேஷ்டிகள் சட்டைகளை மாற்றலாம். ஆனால், எங்கள் உடம்பில் ஓடும் ரத்தத்தை மாற்ற முடியுமா என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

கொள்கை ரீதியாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு சார்பாக தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- இது இறுதிப் தீர்ப்பு இல்லை. வரும் 19ம் தேதி பொதுக்குழு உட்பட அனைத்து அம்சங்களையும் கேட்டு விசாரணை நடத்தி  தீர்ப்பளிப்பதாக நீதியரசர்கள் தெரிவித்துள்ளார்கள். எங்கள் தரப்பில் அனைத்து அம்சங்களையும் நீதிமன்றத்தில் வாதங்களாக வைப்போம். அதில் கிடைக்கும் தீர்ப்பின் அடிப்படையில் நீதிக்கு தலை வணங்குவோம். 

இதையும் படிங்க;- கடவுளே.. நல்ல உடல்நலத்துடன் சீக்கிரம் வெளிய வரணும்.. பழைய நண்பருக்காக வருத்தப்பட்ட டிடிவி. தினகரன்!

என்னுடைய உடம்பில் ஓடும் இரத்தம் அதிமுக ரத்தம். தீர்ப்புகளின் மூலமாக வேஷ்டிகள் சட்டைகளை மாற்றலாம். ஆனால், எங்கள் உடம்பில் ஓடும் ரத்தத்தை மாற்ற முடியுமா என கேள்வி எழுப்பினார். இந்த தேர்தல் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். பத்தாண்டு நல்லாட்சி தந்துள்ளதால் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறோம். இந்த நிமிடம் வரை அகில இந்திய பாஜக தலைமை எங்களுடன் கூட்டணி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

பிரிந்த சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது எண்ணம். கொள்கை ரீதியாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். எங்களுடன் இணைந்து செயல்படுவது பற்றி சசிகலா தான் முடிவெடுக்க வேண்டும். 1989 தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் சேவல் சின்னத்தின் தனியாக நின்று ஐந்து தொகுதிகளில் வென்ற ஈரோடு மாவட்டத்திலேயே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோற்றோம்.

இதையும் படிங்க;- எனக்கு கால் வலி .. முடிந்தால் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வேன்.. எடப்பாடி பழனிசாமி!

சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடிய அதிமுக எம்பிக்களை அனுப்பி வைத்தது எடப்பாடி பழனிசாமி தான். நிலைமைக்கு தகுந்த மாதிரி  மாற்றி மாற்றி பேசிக் கொண்டு உள்ளார் எடப்பாடி பழனிசாமி. பொய்கள் பேசுவதில் அவர் மிகவும் வல்லவர். எடப்பாடி பழனிசாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன். அதற்கான ரகசியத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் தெரிவிப்பேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி