ஒரே வார்த்தையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இமேஜை மொத்தமாக காலி செய்த செல்லூர் ராஜூ

Published : Jan 11, 2024, 05:38 PM IST
ஒரே வார்த்தையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இமேஜை மொத்தமாக காலி செய்த செல்லூர் ராஜூ

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடபான செய்தியாளர்கள் கேள்விக்கு புலி வேட்டைக்கு போகும்போது எலிய பத்தி கேக்காதீங்க என்று செல்லூர் ராஜூ பதில் அளித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ மீது அவதுாறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் முன்னாள் செல்லுார் ராஜூ இன்று வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 21 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், நான் ஆர்ப்பாட்டத்தில் உண்மையை தான் கூறினேன். ஆனால் என்மீது வழக்கு போட்டுள்ளார்கள். நான் பொதுவாழ்வுக்கு வரும் போது திமுக தொடர்ந்த கொலை வழக்கிலேயே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அந்த வழக்கில் குற்றமற்றவன் என நிருபித்து விடுதலையானவன் நான்.

அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு ஜீஜீபி. பொதுவாழ்க்கைக்கு வந்தபின்பு வழக்குகளை கண்டெல்லாம் அதிமுககாரர்கள் பயப்பட மாட்டார்கள். தமிழக மக்கள் நாள்தோறும் நான் ஆர்ப்பாட்டத்தில் பேசியதை தான் பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் நான் மேடையில் பேசியதால் அவதூறு வழக்கு போடுகிறார்கள்.

தூத்துக்குடியில் 7 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொடூரக்கொலை; போலீஸ் விசாரணை

குறைகளை களைவதை விட்டுவிட்டு பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை தான் திமுக செய்கிறது. ஒபிஎஸ் அதிமுக சின்னம், கொடி ஆகாயவற்றை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது குறித்த கேள்விக்கு, நாங்கள் புலிவேட்டைக்கு செல்கிறோம். எலிவேட்டையை பற்றி பேசாதீர்கள் என கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!