திமுக எம்எல்ஏவை உள்ளங்கையில் வைத்து தாங்கும் முதலமைச்சர்..! நேரில் சென்ற விஜயபாஸ்கர்.. லேட்டா பார்த்த ஸ்டாலின்

By Selva KathirFirst Published Jun 6, 2020, 1:28 PM IST
Highlights

திமுக எம்எல்ஏ ஒருவரின் உடல் நலனில் அக்கட்சித் தலைவரை காட்டிலும் அதிமுக அதிக ஆர்வம் காட்டி வருவது தான் தமிழகத்தின் கொரோனா அரசியல் எனப்படுகிறது.

திமுக எம்எல்ஏ ஒருவரின் உடல் நலனில் அக்கட்சித் தலைவரை காட்டிலும் அதிமுக அதிக ஆர்வம் காட்டி வருவது தான் தமிழகத்தின் கொரோனா அரசியல் எனப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையே திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது அவர் சிகிச்சையில் உள்ள ரெலா மருத்துவமனை மூத்த மருத்துவர்கள் தமிழக அரசின் அரசு மருத்துவமனை ஏதேனும் ஒன்றில் சேர்ந்து சிகிச்சை பெறுவது தான் சரியான முடிவாக இருக்கும் என்று அன்பழகனிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து உடனடியாக சுகாதாரத்துறை செயலாளரை திமுக எம்எல்ஏ அன்பழகன் தரப்பு தொடர்பு கொண்டுள்ளது. ஆனால் அப்போது சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஸ்பெசல் ரூம் எதுவும் இல்லை.

இதனை அடுத்து தற்போதைக்கு சாதாரண வார்டில் அட்மிட் ஆகும் படி சுகாதாரத்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் உடன்பாடு இல்லாமல் ரெலா மருத்துவமனையிலேயே அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா ஞாயிற்றுக்கிழமை உறுதியானாலும் கூட இரண்டு மூன்று நாட்கள் கழித்தே இந்த தகவல் வெளியானது. அதற்குள் அன்பழகன் உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளது. எம்எல்ஏ ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார் என்கிற தகவல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதுநாள் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் 99 சதவீதம் பேர் குணமாகி வீடு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் அன்பழகனுக்கு ஏதேனும் விபரீதம் ஆகிவிட்டால் அது இத்தனை நாள் கட்டிக்காத்த இமேஜை டோட்டல் டேமேஜ் ஆக்கிவிடும் என்று முதலமைச்சர் கருதியுள்ளார். அத்தோடு கொரோனாவிற்கு எம்எல்ஏ ஒருவரை உயிரிழக்கும் பட்சத்தில் மக்கள் மத்தியில் பயங்கர பீதி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்தே உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரெலா மருத்துவமனை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்க எந்த உபகரணம் தேவை என்றாலும் உடனடியாக அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

அத்தோடு மட்டும் இல்லாமல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் உடனடியாக ரெலா மருத்துவமனைக்கே நேரில் அனுப்பி வைத்தார் முதலமைச்சர். ரெலா மருத்துவமனை திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். எனவே உண்மையில் அன்பழகன் கொரோனா பாதித்து அபாயகட்டத்தில் உள்ளாரா? அல்லது அவரை வைத்து திமுக அரசியல் செய்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள முதலமைச்சர் தரப்பு விரும்பியுள்ளது. இதனை அடுத்தே அமைச்சர் நேரடியாக ரெலா மருத்துவமனை சென்று அன்பழகன் உடல் நிலை சீராக உள்ளதை உறுதி செய்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்ன என்றால் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தரப்பில் இருந்து பெரிய அளவில் எந்த நிர்வாகியும் மருத்துவமனை பக்கம் கூட செல்லவில்லை. இத்தனைக்கும் சென்னை திமுகவில் அன்பழகன் மிக மிக முக்கயமான நிர்வாகி. அப்படி இருந்தும் ஸ்டாலின் தொலைபேசி மூலம் அன்பழகன் உறவினர்களிடம் அவ்வப்போது நிலவரத்தை கேட்டுக் கொள்வதோடு முடித்துக் கொண்டார். இதற்கு காரணம் தேவை இல்லாமல் தற்போது வெளியே செல்வது கொரோனா தொற்றுக்கான வாய்ப்பாகிவிடும் என்று ஸ்டாலின் தரப்பு அஞ்சுவது தான் காரணம் என்கிறார்கள்.

அதேசமயம் அன்பழகன் உடல் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் திமுக தரப்போ பாரா முகமாக இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகளே பேச ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து, இன்று அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்று அன்பழகனின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!