ஸ்டாலினின் ஒன்றிணைவோம் வா..! அப்படியே காப்பி அடித்த நம்மவர் கமல்..! மக்கள் நீதி மய்யத்திற்கு நாமே தீர்வு..!

By Selva KathirFirst Published Jun 6, 2020, 1:09 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றினைவோம் வா திட்டத்தை அப்படியே காப்பி அடித்து நாமே தீர்வு என்கிற பெயரில் சென்னையில் மட்டும் கமல் கட்சியினர் செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றினைவோம் வா திட்டத்தை அப்படியே காப்பி அடித்து நாமே தீர்வு என்கிற பெயரில் சென்னையில் மட்டும் கமல் கட்சியினர் செயல்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு ஆரம்பமான சமயத்தில் ஏழை எளிய மக்கள் உணவு உள்ளிட்ட பொருட்களை பெற மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். ரேசன் கடைகள் மூலம் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டாலும் கூட சாலை ஓரத்தில் வசிக்கும் மக்கள், ரேசன் கார்டுகள் இல்லாதவர்கள், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு வந்து சிக்கியவர்கள் என பலரும் உணவு இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் திமுக ஒன்றினைவோம் வா என்கிற திட்டத்தை செயல்படுத்தியது. இதற்காக கட்டணம் இல்லா செல்போன் எண் அறிவிக்கப்பட்டது.

அந்த எண்ணில் அழைத்து தங்கள் முகவரியை கூறி தேவையை மக்கள் தெரிவிக்க வேண்டும். அவர்களின் தேவை உண்மையாக இருப்பின் உதவி கோரிய மக்கள் இருக்கும் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன. இப்படியாக உணவு தேவைப்பட்டோருக்கு உணவு, சமையல் பொருட்கள் தேவைப்பட்டோருக்கு சமையல் பொருட்கள் என திமுகவினர் பம்பரமாக சுழன்று வழங்கி வந்தனர். சில இடங்களில் வந்த வேண்டுகோள்களை நிறைவேற்ற முடியாத அளவிற்கு மக்களிடம் இருந்து அழைப்புகள் வந்தன.

இந்த நிலையில் நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இவரும் இலவச செல்போன் எண் ஒன்றை அறிவித்துள்ளார். ஆனால் இந்த செல்போன் எண்ணில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டுமே அழைத்து உதவி கோர முடியும். சென்னையில் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில் பெரும்பாலும் மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கால் சென்டர் ஒன்றோடு கமலின் மக்கள் நீதிமய்யம் உடன்பாடு செய்துள்ளது.

உதவி கோரி வரும் அழைப்புகளின் விவரத்தை பெறும் கால் சென்டர் பெண்கள் அதனை உடனடியாக மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். உணவு, உடை, மருத்துவ வசதிகள் தேவைப்படுவோருக்கு திமுக பாணியில் உதவி கோரும் மக்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் உதவி வருகின்றனர். இதற்காக தன்னார்வலர் அமைப்புகளுடனும் கமல் கட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் உணவு உள்ளிட்ட பொருட்களை பெறவும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

திமுகவின் ஒன்றினைவோம் திட்டம் சென்னையில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இதனை கவனத்தில் கொண்டு சென்னையில் அதே பாணியில் ஒரு திட்டத்தை செயல்படுத்தி மக்களை கவர கமல் கட்சியினர் போட்ட திட்டம் தான் நாமே தீர்வு என்கிறார்கள். ஆனால் செயல்முறை முழுக்க முழுக்க திமுக பாணியில் இருப்பதால் அந்த கட்சியிடம் இருந்து ஐடியாவை கமல் சுட்டுவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

click me!